22 ஆதரவு: 11 எதிர்ப்பு: 14 தவிர்த்தது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. இதில், இலங்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. வாக்களிப்பிலிருந்து 14 நாடுகள் தவிர்த்து கொண்டன. அதனடிப்படையில் அந்தத் தீர்மானம் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வாக்களிப்பில் எதிர்த்து வாக்களித்த நாடுகளில், சீனா. ரஷ்யா, வெனிசுலா, பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகளும் அடங்குகின்றன.

அதில், 27 நாடுகள் ஆதரவாகவும் பிஜி எதிராகவும் வாக்களித்தன. 17 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்தன. அதில், இந்தியாவும் வாக்களிப்பை தவிர்த்து (abstain) கொண்டமை குறிப்பிடத்தக்கது.