‘26ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானது’

நாட்டுக்காக ஒக்டோபர் 26ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (04) மாலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்துரையாற்றுகையில், ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கத்தையும், ஐக்கிய தேசிய கட்சியை​யும் நாசமாக்கியுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.