காங்கிரஸுடன் நெருங்கும் ஆம் ஆத்மி: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார் கேஜ்ரிவால்

டெல்லியில் 1998 முதல் 2013-ம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. இதற்கு, புதிய கட்சியாக உருவான ஆம் ஆத்மி கட்சி முடிவு கட்டியது டெல்லியில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆட்சி அமைந்தது முதல், ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே மோதல் வலுத்து வந்தது. அதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை எதிர்த்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வந்த காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மியை மட்டும் சேர்க்கவில்லை.இதன் காரணமாக, காங் கிரஸுக்கு எதிராக பேசி வந்த கேஜ்ரிவால், மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், தற்போது காங்கிரஸும், ஆம் ஆத்மியும் நெருக்கம் காட்டி வருகின்றன. கடந்த நவம்பர் 30-ம் தேதி டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் அதற்கு அடித்தளம் அமைத்தது.

ராம்லீலா மைதானத்தில் நடை பெற்ற அந்தப் போராட்ட மேடை யில், ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலும் கலந்து கொண்டார். இந்நிலையில், தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடு முயற்சியில் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும் கேஜ்ரிவால் பங்கேற்கவிருக்கிறார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஆம் ஆத்மியின் முன்னாள் தேசிய நிர்வாகியும், குருகிராம்வாசியுமான ராதா கிருஷ்ணன் கூறுகையில், ‘‘டெல்லி தேர்தலில் காங்கிரஸ் வாக்கு களை பெற்றே கேஜ்ரிவால் முதல் வரானார். எனவே, வரும் மக்கள வைத் தேர்தலில் தோல்வியை தவிர்க்க, ஆம் ஆத்மியும், காங்கிர ஸும் கூட்டணி அமைக்க வேண்டி யிருக்கும்’’ எனத் தெரிவித் தார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இன்னும் தனது முடிவை தெரிவிக்கவில்லை.