275 பயணிகளுடன் பயணித்த விமானம் தரையிறங்கும்போது விபத்து

இந்தியாவின் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் எயார்லைன் விமானமொன்று டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை, விமானத்தில் பயணித்த 275 பயணிகளும் பாதுகாப்புடன் உள்ளனனர் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. போயிங் 777 ரக விமானமே தரையிறங்கும் போது தீபற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் தரையிறங்கிய இடத்தைச் சுற்றி புகை மண்டலம் வான்நோக்கி மேலெழுந்துள்ளது.