348 பேருக்குக் கொரோனா

கொவிட் தொற்று காரணமாக சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டோரை கண்காணிக்க, சிவில் உடையில் பொலிஸார்  கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

சுகாதாரப் பிரிவினர் வழங்கியுள்ள சுகாதார விதிமுறைகளை சிலர் மீறி நடப்பதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எனவே, இன்று(31) முதல் விசேட கண்காணிப்பில் பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பிரதேசங்கள் இன்று காலையில் 5.00 மணி தொடக்கம் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதனை, கொவிட் 19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாரஹேன்பிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட100 ஆம் இலக்க தோட்டம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் – அன்றூஸ் வீதி, கீழ் மற்றும் மேல்புனித அன்றூஸ் பிளேஸ் பகுதிகள் ஆகியவற்றில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளன.

மேலும், பேலியகொடை பொலிஸ் பிரிவின் கங்கபட கிராம சேவகர் பிரிவுக்குட்டப்ட  90 ஆம் இலக்க தோட்டம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.