7 உணவகங்களுக்கு சீல்

யாழ்ப்பாணத்தில், சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு, 8 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள அதேவேளை, அவ்வுணவகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.யாழ். மாநகரசபையின் சுகாதரப் பரிசோதகர்களால், சபை எல்லைக்கு உட்பட்ட குருநகர், வண்ணார்பண்ணை மற்றும் யாழ். நகர்ப் பகுதிகளில் உள்ள உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன்போது, சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கும் ஏழு உணவகங்களைக் கண்டறிந்த பரிசோதகர்கள், அவ்வுணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக, யாழ். நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

அதையடுத்து நடைபெற்ற விசாரணையின் போது, உரிமையாளர்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், அவர்களுக்கு தலா 1 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதவான், மேற்படி உணவகங்களின் சீர்கேடுகளை நிவர்த்தி செய்த பின்னர், சுகாதாரப் பரிசோதகர்களின் அறிக்கை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்றும் அதுவரை, அவ்வுணவகங்களுக்கு சீல் வைக்குமாறும் உத்தரவிட்டா​ர்