97 மேலதிக வாக்குகளால் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 97 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் இன்று (10) நிறைவேறியது. வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.