சி.வியின் கோரிக்கைக்கு சம்பந்தன் மறுப்பு

“ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள இரு அமைச்சர்கள் தொடர்பில், என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தபடி, இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு மாறான தங்களுடைய நடவடிக்கையின் தொடர்ச்சியாக, மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைமையைச் சீர்செய்வதற்காகவே நான் எனது ஒத்துழைப்பை நல்க முயற்சிக்கின்றேன். (“சி.வியின் கோரிக்கைக்கு சம்பந்தன் மறுப்பு” தொடர்ந்து வாசிக்க…)

த.தே.கூவில் பிளவு? தனித்தியங்குவது குறித்து பங்காளிக் கட்சிகள் பேச்சு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக, அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

(“த.தே.கூவில் பிளவு? தனித்தியங்குவது குறித்து பங்காளிக் கட்சிகள் பேச்சு” தொடர்ந்து வாசிக்க…)

27வது தியாகிகள் தினம்

தோழர்பத்மநாபா மற்றும் தோழர்கள் பன்னிருவர் புலிகளால் சென்னை கோடம்பாக்கத்தில் வைத்து படுகாலை செய்யப்பட்ட ஜீன் 19 நாளை நாங்கள் தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கின்றோம். இந்த நாளில் ஈழ விடுதலைப்போராட்டத்தில் மரணித்த அனைவரையும் நினைவுகூரும் பொதுநாளாகக்கொண்டு நாங்கள் ஒருங்கிணைந்து ஒன்று கூடி அஞ்சலி செலுத்துகிறோம்.தோழர்பத்மநாபா அவர்களைப்போல் ஒரு மனிதரை, தலைவரை நாங்கள் இதுவரை பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை அவர் இல்லாத தலைமை இன்று வரை வெற்றிடமாக உள்ளதையே உணர்கிறோம்.
(“27வது தியாகிகள் தினம்” தொடர்ந்து வாசிக்க…)

27 வது தியாகிகள் தினம்

(19.06.2017 தியாகிகள் தின அஞ்சலிக்கவிதை)
………………………………………………………………..
விடுதலைப் பறவை தோழர் பத்மநாபா
.
இந்த விடுதலைப் பறவையின்
இமைகள் மூடிவிட்டனவா -இல்லை
மூடப்பட்டன.

இதயமில்லா இராட்ஷதர்
பாசிச அசுரர்
இரத்த வெறியின்
குத்தகைக் காரர் -புலிகள்
புரிந்த கொடுமையில்
இமைத்தான் மூடின .

இந்த புரட்சிப் பறவையின்

இதயம்
என்றும் விழித்திருக்கும் -அதன்
சுதந்திரகீதம்
விடுதலை போரில்
கலந்தொலிக்கும் .

ஈழ மண் வாசனையிலும் -இனி
இப்பறவையின் நேசமும்
கலந்தேவீசும்
பறந்து விரிந்த இதன்
சிந்தனைச் சிறகு
பட்டாளி மக்களுக்கு
நிழலாகும்

இது நிஜமாகும் -நாம்
நிஜங்களை தூங்குபவர்கள்
நிதர்சனப் பார்வையில்
வளர்ந்தவர்கள்-எமை
வளர்த்த இப்பறவையின்
கீதத்தை மீண்டும் – மீண்டும்
மீட்டீயே தீருவோம் .

ஆம்.
இந்த பறவையின்
இமைகள் மூடவில்லை .

எம்
இதயங்களில்
விழித்திருக்கிறது -ஈழ
விடுதலையைக் காண
விழித்தே இருக்கிறது

.
தியாகிகளின் சமாதிளே எங்கள் ஆராதனைக்குரிய தேவாலயங்களாகும்
.
பத்மநாபா மக்கள் முன்னணி -சுவிஸ்

கட்டார்: பாலைவனத்தில் ஒரு பனிப்போர்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பாலைவனங்கள் போருக்குரியனவல்ல. போரும் பாலைவனத்துக்குரியதல்ல. ஆனால், பாலைவனத்துக்கும் போருக்குமுரியதாய் மத்திய கிழக்கு என உலக வரைபடத்தில் குறிக்கப்பட்ட பகுதி தொடர்ந்தும் திகழ்ந்து வருகிறது. இப்பாலைவனங்கள் தங்களுக்குள் உட்பொதிந்திந்து வைத்திருந்த இயற்கை வளங்கள், சோலைவனங்களாக மாற்றும் வல்லமையுடையவை. இன்று இவ்வளங்களே பாலைவனத்தை சோகவனமாகவும் இரத்தக் களரியாகவும் மாற்றியுள்ளன. உலகளாவிய ஆதிக்கத்துக்கான போட்டியின் மூலோபாய கேந்திரமாக இதன் அமைவிடம் போர் எனும் அவல நாடகத்தை முடிவற்ற தொடர்கதையாக்கியுள்ளது.

(“கட்டார்: பாலைவனத்தில் ஒரு பனிப்போர்” தொடர்ந்து வாசிக்க…)

ஈழ விடுதலை போராட்டத்தில் காவியமான தோழர்கள் நினைவாக.

இனிய தோழர்களே நான் உங்களை நினவு கூருகிறேன்.

காரணம் நீங்கள் என்னுடன் கல்வி கற்றதால் அல்ல,

நாம் ஒன்று கூடி கால்ப்பந்தோ அல்லது மென் பந்தோ விளையாடியதால் அல்ல.

என் சுக துக்கங்களில் கலந்து கொண்டதால் அல்ல.

உங்கள் உணவை என்னுடன் பகிர்ந்ததால் அல்ல.

நாம் விரும்பி இணைந்த ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில்

ஆயுதம் ஏந்தி மக்களுக்காக போராடி நீங்கள் மரணித்த ஒரே ஒரு காரணம் மட்டும் தான்,

என் இதயத்தில் உங்கள் நினைவை விருட்சமாய் வளர செய்து,

உங்கள் நினைவுகளை நிலைக்கச் செய்தது.

கும்பகோணம் சிவபுரம் முகாமில் பயிற்சி முடித்து பாக்குநீரிணையை கடக்கையில்,

காரைநகர் கடல் படை தள தாக்குதலில், யாழ்ப்பாணத்தில், வன்னியில்,

திருமலையில், மட்டக்களப்பில், அம்பாறையில் என எம் ஈழ மண்ணில்,

எதிரியுடன் மோதி மட்டுமல்ல சகோதர அமைப்பின் தலைமையின் தவறான முடிவால்

தெருக்களிலும், சிறைபட்டும் கந்தன் கருணை இல்லத்திலும்,

தாய் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை கோடம்பாக்கம்

சக்காரியா கொலனி, பவர் அப்பாட்மன்ற் தொடர்மாடி

ஐந்தாம் இலக்க வீட்டில் வைத்து, நிராயுதபாணிகளாக இருந்த வேளை,

தலைவருடன் அனைவரையும் துப்பாக்கி ரவை கொண்டு உருத்தெரியாமல் அவர்களின் முகம் சிதைத்த

தினத்தை மனதில் இருத்தி, உங்கள் அனைவரையும் நினைத்து,

ஆண்டுதோறும் ‘’தியாகிகள்’’ தினம் அனுஸ்டிக்கும் உங்கள் தோழர்கள் போலவே,

நானும் தனித்திருந்து உங்களை நினைவு கூருகிறேன்.

‘’புனிதராகி போனவரே உங்கள் புகழ் உடல் நித்திலம் ஆனது’’.

– ராம் –

வட மாகாண சபை நந்தவனத்து ஆண்டிகள்!?

பூனை குட்டிகள் கூடைக்குள் இருந்து வெளியே வந்துவிட்டன. ஆளுனரை சந்தித்து எலி பிடிக்க முடியாத தங்கள் தந்தை மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவந்து வளர்ப்பு தந்தைக்கு ஏற்பாடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த நிலை தனக்கும் முன்பு முதலமைச்சராக இருந்த வேளை வந்தது என கூறிய ஆளுநர் தந்தையின் மீதான குற்றசாட்டுகளை தரச்சொன்னார்.

(“வட மாகாண சபை நந்தவனத்து ஆண்டிகள்!?” தொடர்ந்து வாசிக்க…)

மணிப்பிரவாள நடைக்கும் இலங்கை தமிழுக்குமான உறவு பற்றி

(அருளினியன்)

மணிப்பிரவாளமும், இலங்கைத் தமிழும்.
“பாடசாலை என்கிறீர்கள், கலாநிதி என்கிறீர்கள், உபதேசம் என்கிறீர்கள் நீங்கள் பேசும் ஈழத் தமிழில்; ஏன் இத்தனை சமஸ்கிருதக் கலப்பு..” எனக் குறைபட்டார்; தனித் தமிழ்ப் பற்றாளரான தமிழ் நாட்டு நண்பர் ஒருவர். ( மேலே கூறிய வார்த்தைகள் எல்லாமே சமஸ்கிருதம்). அவர் சொல்வது உண்மைதான்; நாங்கள் ஈழத் தமிழில் அன்றாடம் உபயோகிக்கும் 50 வார்த்தைகளை பட்டியல் இட்டால் அதில் குறைந்தது 10 வார்த்தைகளாவது சமஸ்கிருதமாக இருக்கும். ( வார்த்தை- சமஸ்கிருதம், சொல்- தமிழ் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால், வார்த்தை என்ற தமிழ்ச் சொல், தமிழில் இருந்தே சமஸ்கிருதத்திற்குச் சென்றது என்போர் பக்கம் நான்)
நாங்கள் பேசும் தமிழில் ஏன் இத்தனை சமஸ்கிருத வார்த்தைகள்..? கொஞ்சம் வரலாறு பார்ப்போம். உண்மையில் ஈழத் தமிழர்களாகிய நாங்கள் பேசுவது சேர நாட்டுத் தமிழ். இன்னும் சொல்லப்போனால் மலை வாழ் மக்களின் தமிழ். மலையாளத் தமிழ். மணிப்பிரவாளத்தின் தாக்கத்தில் வந்த தமிழ்.

(“மணிப்பிரவாள நடைக்கும் இலங்கை தமிழுக்குமான உறவு பற்றி” தொடர்ந்து வாசிக்க…)

வட மகாண சபையின் நம்பிக்கைப் பிரோரணை….??

யார் யார் மீது குற்றச்சாட்டுவது…..?

யார் யாரை ஊழல் பேர் என்று கூறுவது……??

யார் யார் மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவருவது….???

யார் யாரை பதவி விலகச் சொல்வது……????

ஓரே குழப்பமாக இருக்கின்றது…..! யாரும் இங்கு சுத்தமானவர்கள் இல்லை இவர்களின் சுத்தம் பற்றியும், சுற்றல் பற்றியும், செயற்படா திறன் பற்றியும் பலரும் பல தளங்களில் புலத்திலும், புலம் பெயர் தேசங்களிலும் கேள்விகளையும், விமர்சனங்களை முன்வைத்தே வந்தனர். எல்லாவற்றிற்கும் அதிகாரம் இல்லை என்றும் ‘தேசியம்? இற்கு எதிரானது’ என்றும் சொல்லி இதற்கு எதிராக கேள்வி கேட்கும் விமர்சனம் செய்பவர்கள் துரோகிகள்…., சதிகாரர்கள்… என்று பொறுப்பற்ற தனமாக பதிலளித்த தலமை அமைச்சரும், இதனால் புழகாங்கிதம் அடைந்த இவர் அமைச்சர்களும், இவரது சகாக்களும், இவர்களுக்கு செம்பு தூக்கியவர்களும் இன்று ‘நீதவான்’ ஐ காப்பாற்ற வேண்டும் என்று நிற்பதும், அவரின் பரிவாரங்களுக்கு ஆலவட்டம் பிடிப்பதும், இவர்களால் தெரிவு செய்யப்பட்டு தற்போது எதிரணியின் நிற்பவர்களையும் வாக்கு போட்டு வெல்ல வைத்த போது எந்த தர்மத்தின் அடிப்படையில், அறம் சார்ந்த செயற்பாடாக செயற்பட்டனர் அன்று என்பது தற்போதுள்ள கேள்வியாகும்.

அப்போ இதற்கு என்னதான் தீர்வு….? மக்கள் நலன்களை முன்னிலைப்படுத்தும் சரியான மாற்று கூட்டுத்தலமை உருவாக்கப்படவேண்டும். இதற்கு பொன்னம்பலத்தாரில் ஆரம்பித்து சிவி வரையிலான தலைவர்கள் பற்றி மதிப்பீடம் அவரகள் சார்ந்த அரசியல் அமைப்புக்களும் மீள்வாசிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு இந்த ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தவிர்க்கப்பட்டு சகல சமூகப்பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய மக்கள் தலமை உருவாக்கப்படவேண்டும். இவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்து மக்களின் கேள்வி பதிலளிக்க வேண்டிய செயற்பாடாளர்களாக இவர்கள் உருவாக்கப்படவேண்டும். மக்கள் நினைத்தால் இது ஒன்றும் முடியாதது அல்ல! எங்கே முயற்சிப்போமா…?

 

 

 

 

யாழ் மாநகர சபை உறுப்பினர் சுபத்திரன் (தோழர் றொபேட்) அவர்களின் 14 ஆவது நினைவு தினம்

யாழ் மாநகர சபை உறுப்பினர் அமரர் த. சுபத்திரன் (தோழர் றொபேட்) அவர்களின் 14 ஆவது நினைவு தினம் (14.06.2003) இன்றாகும். தமிழ் மக்களது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டதில் தனது 24 ஆவது வயதில் இணைந்து கொண்ட சுபத்திரன் 46 வயதில் இறக்கும் வரை அதே குறிக்கோளுடன் உழைத்தவர்.
இன்றைக்கு, இளம் வயதில் தனது சமூகத்தைப்பற்றி தன்னை சூழவுள்ள மனிதர்களின் அவலங்கள் பற்றி பொது விவகாரங்கள் பற்றி ஆழ்ந்தாராய்ந்து சிந்திக்கின்ற இளம் சந்ததியை பெற்றிருக்கின்றோமா? எமது இளைஞர் யுவதிகளின் சமூக ஈடுபாடு குன்றிப்போனதற்கான, திசைவிலகலுக்கான காரணங்கள் என்ன? என்பன நாம் விடை தேடவேண்டிய வினாக்களாகும்.
(“யாழ் மாநகர சபை உறுப்பினர் சுபத்திரன் (தோழர் றொபேட்) அவர்களின் 14 ஆவது நினைவு தினம்” தொடர்ந்து வாசிக்க…)