நல்லாட்சியில் நிர்க்கதி, ஐ. தே. க – மு. கா கூட்டு சதி, சம்பந்தன் அமைதி, இது கிழக்கு பட்டதாரிகளின் விதி!

(விருட்சமுனி)

தேசிய இன பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் பின்னடைவு அடைகின்றபோது, சிறுபான்மை இனங்கள் அவர்களுடைய அபிலாஷைகள் பாதிக்கப்படுவதாக உணர்கின்றபோது, வேலை வாய்ப்பை பெறுவதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றபோது நாட்டில் அரசியல் ஸ்திர தன்மை பாதிப்படைகின்றது என்றும் இச்சூழ்நிலை கரு கொள்கின்றபோது கால ஓட்டத்தில் அரசியல் மாற்றத்துக்கான வாய்ப்புகள் உருவாகின்றன என்றும் அரசியல் அவதானிகள் எடுத்து சொல்கின்றார்கள். இவை போன்ற விடயங்களே மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தன. அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் ஆயுளையும் இவை போன்ற விடயங்களே தீர்மானிக்க கூடியவையாக உள்ளன. ஆனால் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் அதன் கண்களுக்கு முன்னால் நடமாடுகின்ற உதாரணமாக மஹிந்த ராஜபக்ஸவை கண்டு வருகின்றபோதிலும் இவை போன்ற விடயங்களை கவனத்தில் எடுத்து செயற்படுவதாக தெரியவில்லை.
(“நல்லாட்சியில் நிர்க்கதி, ஐ. தே. க – மு. கா கூட்டு சதி, சம்பந்தன் அமைதி, இது கிழக்கு பட்டதாரிகளின் விதி!” தொடர்ந்து வாசிக்க…)

காவி அணிந்த பிக்குகள் அரசியல் செய்வதும் வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அபத்தம்!

 

(ரி. தர்மேந்திரன்)

பண்டைய யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சி செய்த சிங்கை ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தில் வந்த முடிக்கு உரிய அரசர் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா நாடு கடந்து நெதர்லாந்தில் வசித்து வருகின்றார். இவர் யாழ்ப்பாண ஆரிய சக்கரவர்த்திகளின் வாரிசு என்பதை உறுதிப்படுத்தித்தான் நெதர்லாந்து அரசாங்கம் இவருக்கு புகலிடம், பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கி உள்ளது. அத்துடன் நாடுகளின் தலைவர்கள், உலகில் உள்ள அரச பரம்பரையினர், சர்வதேச சமூக பிரதிநிதிகள் இவரை ஏற்று அங்கீகரித்து உள்ளனர். மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இருந்த முன்னைய அரசாங்கம் இவரை நாட்டுக்கு திருப்பி வரவழைப்பதற்கு பகீரத முயற்சிகள் மேற்கொண்டு இருந்தது. இப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் மிக நெருக்கமான நண்பரும், சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சருமான வைத்திய கலாநிதி ராஜித சேனாரட்ண அப்போதைய அரசாங்கத்தில் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சராக இருந்தபோது ராஜா ரெமிஜியஸ் கனகராஜாவை சந்தித்து பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(“காவி அணிந்த பிக்குகள் அரசியல் செய்வதும் வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அபத்தம்!” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியாவில் முதன்முறையாக இலங்கை மலையகத் தமிழர் ஒருவர், I.A.S தேர்வில் சித்தி

இந்தியாவில் முதன்முறையாக இலங்கை மலையகத் தமிழர் ஒருவர், I.A.S தேர்வில் சித்திபெற்று தற்போது கோழிக்கோடு ( calicut) மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள படகரா கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பசேகர் காளிமுத்து. இவரின் முன்னோர், கடந்த 1823 ம் ஆண்டு இலங்கைக்குக் குடி பெயர்ந்தனர். ஆங்கிலேயர்கள், இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் வேலைக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோரை அழைத்துச் சென்றனர். அதில் இன்பசேகர் காளிமுத்துவின் முன்னோர்களும் அடங்கியிருந்தனர்.

(“இந்தியாவில் முதன்முறையாக இலங்கை மலையகத் தமிழர் ஒருவர், I.A.S தேர்வில் சித்தி” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளுடன் தொடர்பு: மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு தடை

விடுதலைப்புலிகள் அமைப்புடன் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தொடர்பு கொண்டிருந்ததாக, மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், மலேசியாவுக்குள் நுழைய தடை விதித்துள்ளனர். மலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்களின் பெயர் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வைகோவின் கடவுசீட்டை பறிமுதல் செய்து, இன்றிரவு விமானத்தில் சென்னைக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

(“புலிகளுடன் தொடர்பு: மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு தடை” தொடர்ந்து வாசிக்க…)

தேசிய பட்டியல் ஆசனம் புளொட்டுக்கு உரியது

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான சுழற்சி முறை தேசிய பட்டியல் ஆசனம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)க்கு உரியது என்று, அக்கட்சியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

(“தேசிய பட்டியல் ஆசனம் புளொட்டுக்கு உரியது” தொடர்ந்து வாசிக்க…)

பிரித்தானியாவில் தொங்கு நாடாளுமன்றம்?

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முடிவடைந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெற்றன. இதில், பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், இறுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர் கட்சியை விட சுமார் 50 இடங்களை அதிகம் வெற்றி பெற்றுள்ளது.

(“பிரித்தானியாவில் தொங்கு நாடாளுமன்றம்?” தொடர்ந்து வாசிக்க…)

27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது

தோழர் கதிர், சுந்தர், சிவா, கொட்வின் என்று பல தோழர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு ஒரு பலமான விடுதலை அமைப்பாக கிளநெச்சிப் பிராந்தியத்தில் போராட முற்பட்டதே பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ். பல்கலைக் கழக மாணவன் விஜிதரன் காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டிற்கு நீதி கேட்டுப் போராடிய யாழ்பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம் வெகுஜனப் போராட்டமாக யாழ் குடாநாட்டிற்குள் உருவெடுத்து குடாநாடு தாண்டி கிளிநொச்சிக்கு விஷ்தரிக்கப்படும் அளவிற்கு கிளிநொச்சி மக்கள் மதியில் அரசியல் வேலைகளை முன்னெடுத்ததில் கிளிநொச்சித் தோழர்களின் பங்களிப்பு அளப்பரியது. மக்களின் வெகுஜன எழுச்சியை புகைப்படம் எடுத்து மிரட்ட முற்பட்ட மாற்று இயக்க உளவுப்படையை மக்கள் நையப் புடைத்து  புகைப்படக் கருவியை பறிமுதல் செய்த வரலாற்றை எற்படுத்தும் மக்கள் எழுச்சியை எற்படுத்தியவர்கள் பலர் எம்மிடையே உருவான பாசிசவாதிகளால் கொல்லப்பட்டுவிட்டனர் . மக்கள் விடுதலைப் படையின் பரந்தன் இராணுவ முகாம் தாக்குதலை வெற்’றிகரமாக நடைமுறைப்படுத்த முனைந்ததில் கிளநொச்சி பிராந்திய தோழர்கள் பல அர்பணிப்புக்களை செய்தே இருந்தனர்இ புலிகள் குடாநாட்டிற்குள் குண்டுச்சட்டிக்குதிரையை ஓட்டியபோது குடாநாட்டிற்கு வெளியே விடுதலை அமைப்பின் செற்பாடுகளை விஸ்தரிப்பதில் இந்த தோழர்கள் பல தியாகங்களை செய்தனர்

27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சுந்தர் என்ற அமலன் சுகந்தன் என்ற யூலியற் இருவரும் EPRLF இயக்கத்தின் போராளிகள். சுந்தர் என்பவர் தனது இயக்கத்தின் முன்னனிப்போராளியாகவும் பல அசாத்தியமான செயல்களையும் செய்தவர். புலிகளினால் முல்லைத்தீவில் வைத்து கால்கள் அடித்து முறிக்கப்பட்டு கொல்லப்பட்டவர். நேசித்தது மக்களின் நலன்களையும் விடுதலையையும் மட்டுமே. தான் பிறந்த ஊருக்கு நிறைய நற்செயல்கள் நடக்க காரணமானவர். ஒட்டுமொத்த தமிழர்களின் சுதந்திரத்தையும் உரிமையையும் குத்தககைக்கு எடுத்தவர்களால் கொலை செய்யப்பட்டார். புலிகள் தங்களுடன் இணைத்து வேலை செய்ய பேரமும் பேசினார்கள். அவர்களுக்கு உடன்படுவது போல் போக்கு காட்டி தப்பி ஓடியவர். இருந்தும் மீண்டும் புலிகளினால் கொலை செய்யப்பட்டார்.

(“27 வது தியாகிகள் தினம் உலகெங்கும் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது” தொடர்ந்து வாசிக்க…)

உரும்பிராய் தியாகி சிவகுமாரன்

(ஒரு நண்பரின் பதிவு ஒன்று உரும்பிராய் தியாகி சிவகுமாரன் அவர்கள் பற்றிய 2013 இல் நான் இட்ட பதிவு ஒன்றை மீண்டும் பதிவிடுகிறேன்)

தியாகி சிவகுமாரன் , வீரன் சிவகுமாரன், உரும்பிராய் சிவகுமாரன் பொன் சிவகுமாரன் என பலராலும் விழிக்கப்பட்ட சிவகுமாரன் அவர்கள் ஒரு தற்கொலை போராளியல்ல. ஒரு மகத்தான உன்னதமான போராளி. வெறுமனே தமிழ் உணர்ச்சியிலும் தமிழ் தேசிய உணர்வலையிலும் போராட கிளம்பிய ஆரம்பகால போராளிகள் மத்தியில் சமூக உணர்வும் தமிழ் சமூகத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என்ற தெளிவிலும் போராட கிளம்பியவர் சிவகுமாரன் அவர்கள். அவரோடு சேர்த்து அவரது சகாக்கள் நால்வர். இவர்கள் அடங்கியதுதான் இவரது இயக்கம். இவர்கள் எல்லோருக்குள்ளும் தான் ஒருவரே சயனைட் குப்பியை கொண்டுதிரிந்தார். அப்பொழுது அவர் பொலிஸ் அத்தியேட்சகர் சந்திரசேகராவுக்கும் அப்போதைய தொலை தொடர்பு அமைச்சர் தியாகராஜா என நினைக்கிறேன் இருவருக்கும் குண்டுவைத்து கொலைசெய்ய முயற்சித்தார் என்ற காரணத்தால் இலங்கை பொலிசாரினால் தேடப்பட்டு வந்தார். இதன் காரணமாக தன்னை போலீசார் பிடித்தால் சித்திரவதை செய்து கொல்வார்கள் என்ற நோக்கத்தால் சயனைட்குப்பியை தான் மட்டும் தனது சகாக்களுக்கு கொடுக்காமல் கொண்டு திரிந்தார். சகாக்கள் பிடிபட்டால் எல்லாவற்றுக்கும் காரணம் சிவகுமாரன் தான் என சொல்லிவிடுங்கள் என்று சொல்லிவைத்திருந்தார். ஆனால் போராடக்கிளம்பிய ஆரம்பங்களிலேயே அவர் கோப்பாய் வங்கி கொள்ளை முயற்சியில் பொலிசாரால் பிடிபடும்போது சயனைட் உட்கொண்டு வைத்தியசாலையில் மரணித்தார்.

(“உரும்பிராய் தியாகி சிவகுமாரன்” தொடர்ந்து வாசிக்க…)