காத்தான்குடியில் துக்க தினம் அனுஷ்டிப்பு

காத்தான்குடி நகரில் கடைகள் பூட்டப்பட்டு துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அத்துடன், வர்த்தக நிலையங்கள், வீடுகளில் வெள்ளை நிறக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப்புலிகள் கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி, காத்தான்குடி பள்ளிவாசல் மீது நடத்திய தாக்குதலில் 103 முஸ்லிம்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், தாக்குதலில் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூர்ந்து இன்று (03), காத்தான்குடி நகரில் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

காத்தான்குடி படுகொலைகள்

(Vijay Baskaran)
புலிகள் அமைப்பின் கொலைவெறியின் உச்சமாக நடந்தகொலைகள்.கிழக்கே இந்து இஸ்லாமிய மக்களிடையே பிளவை ஏற்படுத்த நடந்த படுகொலைகள்.ஒரு போராட்டத்தின் பெயரால் அறுபதுக்கும் அதிகமான குழந்தைகள் உட்பட அதுவும் அப்பாவிகளை தொழுகையின்போது சுட்டுக் கொன்றார்கள்.

(“காத்தான்குடி படுகொலைகள்” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…… (Part 1)

எனது தமிழ்நாட்டுப் பயணத்தை முடித்து சென்னை விமான நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட நடுச்சாமம் கட்டுநாயக்கா விமாநிலையத்தை சென்றடைந்தேன். சென்னை விமான நிலையத்திலிருக்கும் போது என் நீண்டநாள் சகாவின் புதல்வி இலங்கை அரசு, புலிகள் என்ற இரு தரப்பு பாதுகாப்பு பிரச்சனைகளால் அகதிகளாக இந்தியாவிற்கு இடம் பெயர்ந்து வளர்ந்து படித்து தற்போது இந்தியாவின் விமானப் போக்குவரத்தில் விமானியாக (இவர்தான் இலங்கையின் முதல் தமிழ் பெண் விமான ஓட்டியென்றே எண்ணுகின்றேன்) வேலை செய்வது இடையிடையே வந்து போனது.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…… (Part 1)” தொடர்ந்து வாசிக்க…)

பாகிஸ்தான் தேர்தல் 2018: இராணுவ ஜனநாயகம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஜனநாயகம் பற்றி நாம் நிறையவே பேசுகிறோம். தேர்தல் அதன் அளவுகோலாயுள்ளது. தேர்தல்களின் மூலம் தெரியப்படும் தலைவர்களை, நாம் ஜனநாயகத்தின் பகுதியாகப் பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். இதனால், தேர்தல்களில் பெறப்படும் வெற்றிகளுக்கான பெறுமதி அதிகம். ஆனால், தேர்தல்கள் உண்மையில் ஜனநாயகத்தின் அளவுகோலாக முடியுமா என்ற கேள்வி, நெடுங்காலமாக வினவப்பட்டு வந்துள்ளது.

(“பாகிஸ்தான் தேர்தல் 2018: இராணுவ ஜனநாயகம்” தொடர்ந்து வாசிக்க…)

விவசாயிகளுக்கு 18,000 ரூபாய் மானியம்

இயற்கையான சேதனப்பசளையை பயன்படுத்தி விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் விசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 18,000 ரூபாவை வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இயற்கை பசளையை பயன்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிரிவித்துள்ளார்.

(“விவசாயிகளுக்கு 18,000 ரூபாய் மானியம்” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் பொலிஸாரின் விடுமுறை இரத்து

ஆவா மற்றும் தனுரொக் குழுக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிவரும் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. கோப்பாய், சுன்னாகம் மற்றும் மணிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பிரதேசங்களில் குறித்த இரண்டு குழுக்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. சமீபத்திலும் இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிவரும் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று ஆகஸ்ட் 1 ‘உலக தாய்ப்பால் தினம்’….

கேரளத்தின் ‘க்ருஹலக்ஷ்மி’ மாத இதழ் தாய்ப்பாலூட்டும் பெண்ணின் படத்தை முகப்பில் வெளியிட்டபோது – ‘100 சதவீத கல்வியறிவு’ பெற்றதாகச் சொல்லப்படும் ‘தெய்வத்தின் சொந்த நாடு’ கேரளாவே விவாதித்து மாய்ந்தது.

(“இன்று ஆகஸ்ட் 1 ‘உலக தாய்ப்பால் தினம்’….” தொடர்ந்து வாசிக்க…)

ராஜபக்‌ஷக்களுடனான சந்திப்பு: சம்பந்தன் யாரை எச்சரிக்கிறார்?

(புருஜோத்தமன் தங்கமயில்)
புதிய அரசமைப்புக்கான வாய்ப்புகள் அனைத்தும் பொய்த்துப்போன புள்ளியில், இரா.சம்பந்தனுக்கும் ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கும் இடையிலான மிக முக்கிய சந்திப்பொன்று, அண்மையில் இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சந்திப்பின் ஏற்பாட்டாளராக இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் ஷியுவான் இருந்திருக்கின்றார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

(“ராஜபக்‌ஷக்களுடனான சந்திப்பு: சம்பந்தன் யாரை எச்சரிக்கிறார்?” தொடர்ந்து வாசிக்க…)

சில மாதங்களில் மாகாண சபை திருவிழா

(Sham Varathan)

எதிர் வரும் சில மாதங்களில் மாகாண சபை திருவிழா நடைபெற போகின்றது என்பது ஊகிக்க கூடிய நிலையில் உள்ளது. அவ்வாறன நிலையில் மக்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டிய நிலையுள்ளது.

(“சில மாதங்களில் மாகாண சபை திருவிழா” தொடர்ந்து வாசிக்க…)

வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள்

(க. அகரன்)

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தால் போல், என்ற பழமொழியொன்றின் அர்த்தத்தை மீள் நினைவுக்கு கொண்டு வருவதாக, வடபகுதியில் சிறுபான்மையினரின் நிலைமை காணப்படுகின்றது. அரசியல் தீர்வு என்ற செயற்பாட்டை, தமிழ் அரசியல்வாதிகள் முன்கொண்டு செல்லும் போது, அது தமிழர்களின் வாழ்வியல் நிலைபேற்றையும் அதனுடன் சார்ந்த நிலத்தொடர்பையும் காரணமாக வைத்து, அழுத்தங்களைப் பிரயோகிக்க கூடியதாகவே அமைய வேண்டும்.

(“வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள்” தொடர்ந்து வாசிக்க…)