சில மாதங்களில் மாகாண சபை திருவிழா

(Sham Varathan)

எதிர் வரும் சில மாதங்களில் மாகாண சபை திருவிழா நடைபெற போகின்றது என்பது ஊகிக்க கூடிய நிலையில் உள்ளது. அவ்வாறன நிலையில் மக்களின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டிய நிலையுள்ளது.

” ஒற்றுமை ” என்ற சொல் இன்று எல்லோர் மனதிலும் விதைக்கப்பட்டுள்ளது , அந்த ஒற்றுமை எவ்வாறு, யாருடன் யார் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற கேள்வி மிக பலரிடம் உள்ளது???

இன்று எமது மக்களின் துயரமான இந்த நிலைக்கு முன்னாள் போராட்ட இயக்கங்களும் அதை விதைபோட்டு நீர் ஊற்றிய தமிழர் விடுதலை கூட்டணியே முக்கிய காரணம் என்பதை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை

இந்த போராட்ட இயக்கங்களுள் சரி பிழைகளுக்கு அப்பால் ஆயுத ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் பலமான அமைப்பாக இருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை அதை யாராலும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது

அவ்வாறு பலமாக இருந்த அமைப்பிடம் தமக்கான ஓர் அரசியல் கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை என்பது உண்மை அதனால் தான் போராட்டம் மௌனிக்கப்பட்டு 9 வருடங்கள் கடந்த நிலையிலும் அவர்களால் ஓர் வலுவான அரசியல் கட்சியை கட்டியெழுப்ப முடியாத நிலையுள்ளது என்பது உண்மை

ஆனால் அன்று தொட்டு இன்றுவரை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிடம் ஓர் வலுவான கட்டமைப்பும் ஜனநாயக செயல்பாடுகளும் இருந்ததால் தான் அவர்கள் மீது அவதூறு களும், சேறு பூசல்களுக்கும், அப்பால் மூன்று பிரிவுகளாக இருந்தாலும் இன்றும் மக்கள் மத்தியில் தங்கள் அரசியல் பணிகளை மேற்கொள்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை

இதற்காக எந்த போராட்ட அமைப்பையும் குறை கூறவோ அல்லது அவர்களின் தவறுகளை நியாயப்படுத்தவோ நான் முயற்சி செய்யவில்லை, கடந்த கால தவறுகளை மீண்டும் புத்துயிர் ஊட்டி விவாதிப்போமானால் எமக்குள் எந்த காலத்திலும் ஒற்றுமை அல்லது விடிவு என்பது எட்டாக் கனியாகவே இருக்கும் என்பதை நாம் சற்று நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம்

தமிழரசு கட்சி சொல்வது போல் எமது சங்கக்கடை தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை சர்வதேசம் உற்று நோக்கிறது நாம் முக்கியமான தேர்தலை சந்திக்கின்றோம் என்பது எல்லாம் வேறும் மாயை என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்

அதே போல் சர்வதேசம் தீர்வை தரும் என்பது எவ்வாறு சாத்தியம் ??? எமது போராட்டத்தை 33 நாடுகள் சேர்ந்து அழித்தார்கள் என்று புரிந்து கொள்ளும் நாம் எப்படி நம்மை அழித்தவர்களே எமக்கு தீர்வு தருவார்கள் என்பதை சிந்திக்காமல் இருக்கின்றோம்

வல்லரசான சீனாவும் ரஸ்யாவும் எந்த ஒரு தருனத்திலும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எந்த தீர்மானத்தையும் ஆதரிக்காது என்பது உண்மை அதே போல் அமெரிக்கா தெற்காசிய விவகாரங்களில் இந்தியாவின் ஆலோசனைப்படிதான் செயல்படும் என்பதும் உண்மை

எனவே இப்போது உள்ள சூழ்நிலையில் எது சாத்தியம் என்பதை சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் அதே போன்று அபிவிருத்தியும், அரசியல் தீர்வும் எமது இரு கண்கள் போன்றது இரண்டையும் ஒரே நேரத்தில் ஒரே நேர்கோட்டில் முன்னெடுக்கும் தலைமைகளே எமது இன்றைய தேவை

அதே போன்று இந்தியாவின் அனுசரனை இல்லாமல் எம்மால் எதையும் சாதிக்க முடியாது அதற்காக நாம் இந்தியாவின் அடிமையாக இருக்க வேண்டும் என்ற தேவையும் இல்லை அவ்வாறெனின் எவ்வாறு இந்தியாவின் அனுசரனையை ராஜதந்திர ரீதியாக கையாள வேண்டும் என்ற தெளிவும் எமக்கு வேண்டும்

இதற்கு அமைவாக வலி தந்தவர்களே அதற்கு மருந்தும் தருவார்களா? என்பதே இன்று மக்களின் கேள்வி அல்லது மீண்டும் தமிழரசு கட்சியிடம் அதிகாரத்தை கொடுத்து விட்டு வேலைவாய்புக்கும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவு களும் வீதியில் தங்கள் வாழ்க்கையை கழிக்க போகின்றார்களா?

அல்லது அரசியல் ரீதியாக இன்று மூன்று பிரிவுகளாக செயல் பட்டுக் கொண்டிருக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி தங்கள் கருத்து முரண்பாடுகளை களைந்து ஒர் வலுவான அணியை உருவாக்கி தங்களுடன் பழைய பகையை மறந்து ஏனைய விடுதலை அமைப்புக்களையும் உள்வாங்கி அரவணைத்து எமது மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் வாழ்வாதாரத்தையும், கல்வியையும் மீள கட்டியெழுப்ப கைகோர்பார்களா?

இவ்வாறான ஓர் முயற்சி கை கூடும் போது தற்போதைய முதல்வர் உண்மையில் மக்களின் நலனில் அக்கறை இருந்தால் இந்த போராளிகளை ஒருங்கிணைத்து அவர்களுடன் இணைந்து பயணிப்பாரா??? அல்லது அவரும் இவர்கள் ஆயுத குழுக்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பாரா ??

எல்லாம் இங்கு கேள்விக் குறியாகவே உள்ளது????