வடக்கின் ‘சுற்றுலா அரசியல்’

(கே. சஞ்சயன்)

கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி, நல்லூரில் தியாகி திலீபனின் நினைவு நாள் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க, யாழ். மாநகரசபை மைதானத்தில், தேசிய சுற்றுலா நாள் நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளில், ஒன்றில், யாழ். மாநகர மேயரும், இன்னொன்றில், வட மாகாண முதலமைச்சரும் பங்கேற்றிருந்தார்கள். இருவருமே, அரசியலில் எதிரெதிர் முகாம்களில் இருக்கின்றவர்கள். திலீபன் நினைவு நிகழ்வு நடக்கும்போது, யாழ். மாநகர சபைப் பகுதியில், வேறு நிகழ்வுகள் நடத்தக்கூடாது என்று, தடுக்கும் முயற்சிகள் மாநகர சபையால் மேற்கொள்ளப்பட்டன.

(“வடக்கின் ‘சுற்றுலா அரசியல்’” தொடர்ந்து வாசிக்க…)

நீர் ஆய்வு அறிக்கையால் சபையில் குழப்பம்

பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரைக் கொண்டு வருவது தொடர்பான பிரேரணை, வடக்கு மாகாண சபையில் இன்று (04) நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (04) அவைத் தலைவர் சீ.வீகே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தால் பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரைக் கொண்டு வருவது தொடர்பான பிரேரணை முன்மொழியப்பட்டது. இந்தப் பிரேரணையை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வழிமொழிந்தார்.

(“நீர் ஆய்வு அறிக்கையால் சபையில் குழப்பம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 05)

கிண்ணியா நகர் மீதான தாக்குதலை வாய்ப்பாக பயன்படுத்த வேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு இருந்தது. அந்தப்பொறுப்பு சிறப்பு அதிரடிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. 1985 மே 17 ஆம் நாள் ஊர்காவல்படைக்கென சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் முன்செல்ல அம்பாறை மாவட்டத்திலுள்ள தம்பிலுவில் கிராமம் சுற்றிவளைக்கப்பட்டு சிறுவர்கள் பெண்கள் உட்பட 40 அப்பாவித்தமிழர்கள் கோரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டனர்.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 05)” தொடர்ந்து வாசிக்க…)

கைதிகள் விடுதலைக்கு தமிழர் சமூக ஜனநாயக் கட்சி கோரிக்கை

பத்திரிகைகளுக்கான அறிக்கை

யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்துவிட்டன. யுத்தத்தை தலைமை தாங்கி நடாத்திய தளபதிகள், யுத்தத்தை நடாத்துவதற்கு தேவையான நிதி மற்றும் ஆயுத தளபாடங்கள் கிடைக்க மூல காரணமாயிருந்தவர்கள், யுத்தத்தை நியாயப்படுத்தும் பிரசாரங்களை முன்நின்று மேற்கொண்டவர்கள் என யுத்தத்தில் முழுமையாக ஈடுபட்ட சுமார் 12000 பேரை கடந்த அரசாங்கம் மன்னிப்பளித்து விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் மீளவும் தமது சமூக பொருளாதார வாழ்வில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களையும், கணிசமானோருக்கு நேரடி உதவிகளையும் அரசாங்கம் வழங்கியிருக்கிறது. இருந்தும் சுமார் 100 பேரளவான முன்னாள் போராளிகளை தொடர்ந்து சிறைகளில் வைத்திருப்பது துயரமானதாகும்.

(“கைதிகள் விடுதலைக்கு தமிழர் சமூக ஜனநாயக் கட்சி கோரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த….! (Part 7)

யாழ்ப்பாணத்திற்கான பயணத்தின் முதல் நாள் வவுனியாவில் இருந்து ஆரம்பித்து வழமையான ஏ9 பாதையினூடு நடைபெற்றது. வவுனியா நகரை சுற்றி வளைத்து சிங்கள மயமாக்கும் நிகழ்வுகள் ஏற்கனவே வவுனியாவின் தெற்குப்பகுதியில் மிகத் தீவிரமாக 50 ஆண்டுகளாக நடைபெற்றாலும் தற்போது இது பெரியமடு போன்ற வடக்கு பிரதேசங்களில் மாகாணத்தின் நில அளவைத் திணைக்களத்தின் பெரும்பான்மை இன பொறுப்பாளரின கனகச்சிதமான செயற்பாடுகள் மூலம் நடைமுறைப்படுதப்படுவதாக தமிழ் நில அளவையாளர்கள் மூலும் அறியக் கிடந்தது.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த….! (Part 7)” தொடர்ந்து வாசிக்க…)

சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய அலைபேசி செயலி அறிமுகம்

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் கலாசார பாரம்பரியம் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் தொடர்பிலானத் தகவல்களை இலகுவாக தெரிந்துக்கொள்வதற்கு புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

(“சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய அலைபேசி செயலி அறிமுகம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 10)

(Thiruchchelvam Kathiravelippillai)
தமிழ்பேசும் மக்களது உறவுகள் திட்டமிட்டவகையில் பிரிக்கப்படுவதற்கு வேறான ஒரு நடைமுறையும் கையாளப்பட்டது.
ஜிகாத் இஸ்லாமியர்களின் மத ரீதியான நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகும். ஜிகாத் என்பது இஸ்லாமியர்களின் தனித்துவத்தினைப் பேணுவதாக இஸ்லாமிய மதத்தினைப் பின்பற்றுபவர்களால் நோக்கப்படுகின்றது.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 10)” தொடர்ந்து வாசிக்க…)

திரும்பிப் பார்க்க வைக்கும் இராதாவின் உரை

சட்ட ரீதியாக அணுக வேண்டிய விடயமொன்றை உணர்வுபூர்வமான ஆர்ப்பாட்டத்தின் மூலம் நிறைவெற்றிக் ெகாள்ள முடிந்திருக்கிறதா? உதாரணத்திற்குத் தனி யார் மருத்துவ கல்லூரி சைற்றத்திற்கு எதிராக நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால், எதுவும் நடந்திருக்கிறதா? இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் சைற்றம் கல்லூரி மாணவர்களுக்ேக வெற்றி கிடைத்திருக்கிறது.

(“திரும்பிப் பார்க்க வைக்கும் இராதாவின் உரை” தொடர்ந்து வாசிக்க…)