யாழ்.சர்வதேச திரைப்பட விழா புனிதங்களை கட்டுடைக்கும் தருணமிது

யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 3 ஆம் திகதி முதல நாளை வரை நடைபெற்றி வரும் சர்வதேச திரைப்பட விழாவான JIFF இல் திரையிடப்படவிருந்த, கனடா வாழ் இலங்கை இலங்கைத் தமிழரான ஜூட் ரட்ணத்தின் “Demons in Paradise” திரைப்படம், இறுதி நேரத்தில் திரையிடப்படும் படங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றது. விதிக்கப்பட்ட தடை குறித்த உரையாடல்கள் பல தளங்களில் இடம்பெற்று வருகின்றன.

(“யாழ்.சர்வதேச திரைப்பட விழா புனிதங்களை கட்டுடைக்கும் தருணமிது” தொடர்ந்து வாசிக்க…)

மாகாண எல்லைகள் மாற்றப்படக்கூடாது தமிழர் நிலத்தொடர்ச்சி தொடரவேண்டும்

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தொடர்ச்சி பாதிக்கப்படாமல், இம் மாகாணங்களின் நிலப்பரப்புகள் ஏனைய மாகாணங்களுடன் எதிர்காலத்தில் இணைக்கப்படும் நிலைமை ஏற்பட விடாமல் தடுப்பது அவசியம். இதற்கு அரசியல் யாப்பு ரீதியாக இப்போதுள்ள மாகாண எல்லைகள் மாற்றியமைக்கப்படாமல் இருப்பது அவசியம் எனத் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் அமைப்பு செயலாளரும் முன்னாள் வட-கிழக்கு மாகாண முதலமைச்சருமான அ. வரதராஜா பெருமாள் தெரிவித்துள்ளார். (“மாகாண எல்லைகள் மாற்றப்படக்கூடாது தமிழர் நிலத்தொடர்ச்சி தொடரவேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

எங்கள் வலியின் உணர்வுகளை வார்த்தைகளால் புரியவைக்க முடியாது

தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்
தமிழ் அரசியல் கைதிகளைப் பொதுமன்னிப்பின் கீழோ புனர்வாழ்வளித்தோ விடுதலை செய்ய நடவடிக்ைக எடுக்குமாறு கொழும்பு மகசீன் சிறைச்சாலை கைதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உருக்கமான கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். வலிகளையும் சுமைகளையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதென்று தெரிவித்துள்ள அவர்கள், தம்மை உறவுகளோடு சேர்த்து வைப்பதற்கு நடவடிக்ைக எடுத்தால், வரலாறு ஜனாதிபதியை வாழ்த்தும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

(“எங்கள் வலியின் உணர்வுகளை வார்த்தைகளால் புரியவைக்க முடியாது” தொடர்ந்து வாசிக்க…)

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம்! கடந்தகால அரசுகளின் தவறான பொருளாதார கோட்பாடுகளே

(கலாநிதி எம். கணேசமூர்த்தி)

‘மத்தள விமான நிலையம், மாகம்புற துறைமுகம் ஆகிய இரு முக்கிய முதலீட்டு முயற்சிகளும் இன்று வெள்ளை யானைகளாகியுள்ளன. ஆயினும் அவற்றின் மீதான கடன்களை செலுத்தியே ஆக வேண்டும்’ இலங்கைப் பொருளாதாரத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையும் பயப்பீதியும் மக்கள் மத்தியில் பல்வேறு உணர்வலைகளைத் தோற்றுவித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பாக மக்களின் கரிசனை முன்னரைவிடக் கூடுதலாகியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது. அரசியல் எல்லைகளுக்கு அப்பால் பொருளாதாரம் தொடர்பாக சாதாரண பாமர மக்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் விழிப்புணர்வு ஒரு நல்ல சமிக்​ைஞயாகவே தோன்றுகிறது.

(“நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம்! கடந்தகால அரசுகளின் தவறான பொருளாதார கோட்பாடுகளே” தொடர்ந்து வாசிக்க…)

ஆசிய நாடுகளின் நாணயம் மேலும் வீழ்ச்சியடையலாம்

அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமையினால் ஆசிய நாடுகளின் நாணய அலகுகள் மேலும் குறைவடையலாம் என ரொயிட்டஸ் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. டொலரின் பெறுமதி அதிகரிப்பதற்கு மேலதிகமாக மசகு எண்ணெயின் விலையும் சர்வதேச மட்டத்தில் அதிகரித்துள்ளது. இது ஆசிய நாடுகளின் நாணயங்களின் பெறுமதியில் மாற்றத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவின் பொருளாதார சேவைத்துறை 21 ஆண்டுகளின் பின்னர் வளர்ச்சியை காட்டுவதாக ரொயிட்டஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய ரூபாவின் பெறுமதி பாரிய சரிவை எதிர்நோக்கியுள்ளது. இந்தியாவின் இறக்குமதி பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு இந்திய பொருளாதாரத்தில் பாரிய தாக்கதை ஏற்படுத்தியுள்ளன என்றும் ரொயிட்டஸ் செய்தி ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் பத்திரிகை அறிக்கை

பத்திரிகைகளுக்கானஅறிக்கை– 06-10-2018
வடக்குமாகாணமும் கிழக்குமாகாணமும் கொண்டிருந்ததமிழர்களின் நிலத் தொடர்ச்சியை இல்லாதுசெய்யும் திட்டமிட்டநோக்குடனேயேமுன்னர் வெலிஓயாஎனஆரம்பிக்கப்பட்டஅரசின் திட்டமிட்டசிங்களகுடியேற்றத்திட்டம்மேற்கொள்ளப்பட்டது. இந்தவிடயம் யுத்தத்தின் காரணமாகஅரசினால் தொடரமுடியாமற் போய்விட்டது. இப்பொழுதுதிருகோணமலை,முல்லைத்தீவுமற்றும் வவுனியாஆகியமாவட்டங்களின் கணிசமானஅளவுநிலப் பகுதிகளைஒருங்கிணைத்தவகையில் ஓருவிரைந்ததிட்டமிட்டசிங்களக்குடியேற்றம் நடைபெற்றுவருவதுஅனைவரும் அறிந்ததே. இந்தப் பகுதிகள் அரசின் குடியியல் நிர்வாகங்களின் கீழில்லாமல் அரசபடைகளின் கட்டுப்பாட்டிலேயேஉள்ளன.

(“தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் பத்திரிகை அறிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் குளங்களை காணோம்?

குடாநாட்டில் எதிர்கொள்ளப்படும் நீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள குளங்கள் அனைத்தையும் பராமரிக்கவேண்டிய தேவையேற்பட்டுள்ளது.யாழில் ஆயிரத்து 83 குளங்கள் இருந்ததாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.ஆனால் அவற்றில் 300 குளங்கள் வரை இருந்த இடமே தெரியாது போயிருப்பதாக சிரேஸ்ட பொறியியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான மா.இராமதாசன் தெரிவித்துள்ளார்.

(“யாழில் குளங்களை காணோம்?” தொடர்ந்து வாசிக்க…)

எதிர்த்து நிற்பது எளிதல்ல

(Vijay Baskaran)
போதநாயகி என்னும் படித்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.அதற்கான பலவேறு காரணங்கள் கதைகளாக வருகின்றன.எவ்வளவுதான் படித்த மனிதர்கள் நிறைந்திருந்தாலும்,கல்வியறிவை சமூகம் பெற்றிருந்தாலும் நம்முடைய வரட்டுத்தனங்களில் இருந்து எம்மால் விடுபட முடியவில்லை. (“எதிர்த்து நிற்பது எளிதல்ல” தொடர்ந்து வாசிக்க…)

“பிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது”

(Menaka Mookandi)

“இன்று, வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றி, பலரும் பரிதாபமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புப் படையினரால், இறுதி யுத்தத்தில் பிரபாகரன் சுற்றிவளைக்கப்பட்ட போது, தமிழ் நாட்டின் அனைத்து அரசியல் தலைமைகளிடமும், இந்திய அரசாங்கத்தால் அது குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில நாள்களில், பிரபாகரன் கொல்லப்பட்டு விடலாம். அதனால், சர்வதேசத் தலையீடு அவசியமா என்று, தமிழ்நாடு அரசியல் தலைமைகளிடம் கேட்கப்பட்ட போது, அவர்கள் அனைவரும், பிரபாகரனை முடித்துவிடுங்கள் என்று கூறியதாக, இந்திய அரசாங்கத்தின், முக்கிய ஆலோசகர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்” என்று, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

(““பிரபாகரனை முடித்துவிடுமாறே தமிழ்நாடு வலியுறுத்தியது”” தொடர்ந்து வாசிக்க…)