ரங்கன லக்மால் கைது

சோஷலிச மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் ரங்கன லக்மால் தேவப்பிரிய கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். பல்வேறு இடங்களில்  போராட்டத்தில் ஈடுபட்டு தொண்டர்கள் இன்று பொலிஸாரிடம் வந்து சரணடைந்து வாக்குமூலம் அளித்தனர். இதேவேளை இன்று அடக்குமுறைக்கு எதிராக சில இடங்களில் போராட்டங்களும் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரச வன்முறையைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம்.

இலங்கை அரச வன்முறையைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம்.
ශ්‍රී ලංකාවේ රාජ්‍ය ප්‍රචණ්ඩත්වයට එරෙහිව මහජන රැස්වීමක්.
A Public Meeting Protesting against State violence in Sri Lanka.

பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம் என்பனவற்றை உடனடியாக நீக்கு!
ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත සහ හදිසි නීතිය වහා අහෝසි කරනු!
Abolish the Prevention of Terrorism act and the Emergency act Immediately!

தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அமைதி போராட்டக்காரர்களையும் விடுதலை செய்!!
අත්අඩංගුවට ගත් සියලුම සාමකාමී විරෝධතාකරුවන් නිදහස් කරනු!!
Release all detained peaceful Protestors!!

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!!!
සියලුම දේශපාලන සිරකරුවන් නිදහස් කරනු !!!
Release all Political Prisoners!!!

அரகலய போராட்டகாரர்களிற்கு எமது ஒன்றுபட்ட ஆதரவு
අරගලයට සවියක්වීමට සියලුදෙනාම එක්වෙමු
Unite in Solidarity to support the Aragalaiya

On Saturday August 20th. 5.30PM-9:00PM

At Scarborough Village CRC

3600 Kingston Road

Scarborough, ON

Welcome all comradely.

Unite in Solidarity to support the Aragalaiya

Equal Rights Movement- Canada (Lanka)

Canadians For Peace Sri Lankan Alliance

Tamil Resources Centre (Thedakam)

Contact:

Jaya: +1 416-275-0070

Ellalan : +1-416-917-0549

Ratnam Ganesh: +1 416-937-5985

தமிழ் அடையாளத்தினூடாக யாழ். உயர்வர்க்க நலன் பேணல்

யாழ். உயர்வர்க்கம் தமது நலன்களுக்காக தமிழ்த் தேசிய உணர்வினையும் அவ்வடையாளத்தினையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்துள்ளதை இலங்கை அரசியல் வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. டொனமூர் அரசியல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் தமது நலனை முன்னிறுத்தியே செயற்பட்டனர். டொனமூர் அரசியல் திட்டம் தமிழ்மக்களுக்கு போதுமானதாக இல்லை என எதிர்த்தவர்களில் ஜீ.ஜீ.பொன்னம்பலம், சேர்.பொன்.இராமநாதன், அ.மகாதேவா போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

அமெரிக்காவில் மீண்டும் குடியேற கிரீன் கார்டுக்கு கோட்டா விண்ணப்பம்

பதவி விலகக் கோரி பொதுமக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்று தனது மனைவி மற்றும் மகனுடன் அங்கு குடியேற அமெரிக்க கிரீன் கார்டைப் பெறுவதற்கு காத்திருப்பதாக தெரிய வருகின்றது.

’ரணில் கோ கம’ மாயமானது

நீர்கொழும்பு  ‘ரணில் கோ கம’ இனம் தெரியாத  நபர்களால் நள்ளிரவில் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு  தெரிவித்து தெல்வத்தை சந்தியில்,  இன்று (17) மாலை ஆறு மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளையும் சுலோக அட்டைகளையும் ஏந்தி இருந்ததோடு அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக குரல் எழுப்பினர். சிவில் சமூகத்தினர் மற்றும் மீனவர்கள் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். நீர்கொழும்பு ‘ரணில் கோ கம’ இன்று (17) அதிகாலை 1.30 மணியளவில் இனம் தெரியாத நபர்களால் முற்றாக அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பசில் – ரணில் திடீர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவும் இன்று (18) சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை, எதிர்காலத்தில் புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான திட்டங்கள் என்பனவும் இதில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

ஆர்ப்பாட்டத்தில் மாணவர் ஒன்றியத் தலைவர் கைது

பிடிவிறாந்தொன்றைக் கொண்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வசந்த முதலிகே, ஜெஹான் அப்புஹாமி மற்றும் மேலும் நால்வர், யூனியன் பிளேஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட ஊர்கள்

1)மட்டக்களப்பு2)மாங்கேணி3)காயாங்கேணி4)புனானை5)பனிச்சங்கேணி6)வட்டவான்7)வாகரை8)கதிரவெளி9)பால்சேனை10)கட்டுமுறிவு11)மீராவோடை12)மாஞ்சோலை13)ஓட்டமாவடி14)கறுவாக்கேணி15)கும்புறுமூலை16)கல்குடா17)கல்மடு18)வாழைச்சேனை19)புதுக்குடியிருப்பு20)கண்ணகிபுரம்21)பெரியபுல்லுமலை22)கரடியனாறு23)மரப்பாலம்24)வேப்பவட்டுவான்25)ஆறுமுகத்தான் குடியிருப்பு26)செங்கலடி27)கொடுவாமடு28)கொம்மாதுறை29)வந்தாறுமூலை30)மாவடிவேம்பு31)களுவன்கேணி32)சித்தாண்டி33)ஈரலிக்குளம்34)ஏறாவூர்35)மஞ்சந்தொடுவாய்36)நாவற்குடா37)நொச்சிமுனை38)கல்லடி39)அமிர்தகழி40)இருதயபுரம்41)பாலமீன்மடு42)புன்னைச்சோலை43)சத்துருக்கொண்டான்44)கருவேப்பங்கேணி45)பெரிய ஊரணி46)சின்ன ஊரணி47)தாண்டவன்வெளி48)தாமரைக்கேணி49)கோட்டைமுனை50)பெரிய உப்போடை51)புளியந்தீவு52)திமிலதீவு53)வீச்சுக்கல்முனை54)சேத்துக்குடா55)காத்தான்குடி56)ஆரையம்பதி57)காங்கேயனோடை58)தாழங்குடா59)கோவில்குளம்60)மண்முனை61)கிரான்குளம்62)வேடர் குடியிருப்பு63)அம்பிலாந்துறை64)கற்சேனை65)அரசடித்தீவு66)கடுக்காமுனை67)பட்டிப்பளை68)மகிழடித்தீவு69)முதலைக்குடா70முனைக்காடு71)கொக்கட்டிச்சோலை72)தாந்தாமலை73)கணேசபுரம்74)வெல்லாவெளி75)காக்காச்சிவட்டை76)பாலையடிவட்டை77)விளாந்தோட்டம்78)ஆனைகட்டியவெளி79)நெல்லிக்காடு80)பலாச்சோலை81)கண்ணகிபுரம்(மட்டக்களப்பு)82)பழுகாமம்83)திக்கோடை84)வீரன்சேனை85)தும்பன்கேணி86)வன்னிநகர்87)பெரியபோரதீவு88)கோவில்போரதீவு89)குருக்கள்மடம்90)செட்டிபாளையம்91)மாங்காடு (மட்டக்களப்பு)92)தேத்தாத்தீவு93)களுதாவளை94)களுவாஞ்சிக்குடி95)பட்டிருப்பு96)எருவில்97)மகிழூர்98)குருமண்வெளி99)ஒந்தாச்சிமடம்100)கோட்டைக்கல்லாறு101)பெரியகல்லாறு102)துறைநீலாவணை103)செம்மண் ஓடை104)முறக்கொட்டாஞ்சேனை105)சந்திவெளி106)கிரான்107)குடும்பிமலை108)வாகனேரி109)மஞ்சந்தொடுவாய்110)இலுப்படிச்சேனை111)பாவற்கொடிச்சேனை112)காஞ்சிரங்குடா113)கரயாக்கந்தீவு114)குறிஞ்சாமுனை115)பருத்திச்சேனை116)ஈச்சந்தீவு117)வவுணதீவு118)நாவற்காடு119)விளாவெட்டுவான்120)மகிழவெட்டுவான்121)உன்னிச்சை122)நரிப்புல்தோட்டம்123)நெடியமடு124)ஆயித்தியமலை125)கரவெட்டி (மட்டக்களப்பு)126)திராய்மடு127)மட்டிக்களி 128)மாமாங்கம்129)நாவலடி130)திருப்பெருந்துறை131)பாலமுனை132)சுங்காங்கேணி133)ஆஞ்சனேயபுரம்134)பாசிக்குடா134)தாண்டவன்வெளி135)தன்னாமுனை136)கொக்குவில்137)களுமுந்தன்வெளி138)பண்டாரியா வெளி139)முனைத்தீவு140)பட்டாபுரம்141)தாண்டியடி142)பாலைநகர்143)காவத்தமுனை144)நாசிவன்தீவு145)நாவல் தோட்டம்146)மாங்கேணி147)மாந்தீவு148)மண்டூர்149)அம்பிளாந்துறை150)முனைக்காடு151)களுதாவளை152)ஆறுமுகத்தான் குடியிருப்பு153)மயிலம்பாவெளி154)குருக்கள்மடம்155)கல்லடி156)தேற்றாத்தீவு157)தேவபுரம்158)சித்தாண்டி159)ஐயங்கேணி160)தளவாய்161)பன்குடாவெளி162)இலிப்பட்டிச்சேனை163)தரவை164)கோராவெளி165)சவுக்கடி166)மாமாங்கம்167மட்டிக்களி168)சிகரம்169)பூநொச்சிமுனை170)கர்பலா171)பரீத்நகர்172)கொத்தியாபுலை173)பொண்டுகள் சேனை174)வெட்டுக்காடு175)விபுலானந்தபுரம்176)நாவக்குடா177)அரசடி178)உப்புக்கராஜ்179)பூம்புகார்180)சீலாமுனை181)புதுநகர்182)வாகனேரி183)கோரலிமடு184)கள்ளியங்காடு185)ஜெயந்திபுரம்186)விஜயபுரம்187)சிவபுரம்188)பனிச்சையடி189)கோவிற்குளம்190)பால்வாத்த ஓடை191)சின்னப் புல்லுமலை192)பேத்தாளை193)துறைவந்தியமேடு194 சல்லித்தீவு195)ஆணைகட்டியவெளி196)மாவடி முன்மாரி197)குருந்தையடி முன்மாரி198)உப்புக்குளம்199)காலபோட்டமடு200)பனையறுப்பான்201)பன்சேனை202)சில்லிக்கொடியாறு203)இலுக்குப்பொத்தானை204)பெரியவெட்டுவான்205)முந்தன் குமாரவெளி206)தம்பானம்வெளி207)காயன்குடா208)மயிலவெட்டவான்209)கரடியன் குளம்210)புலயவெளி211)பாலர்சேனை212)கிண்ணையடி213)கொண்டையன்கேணி214)சின்னவெம்பு215)மாவேற்குடா216)சுரவணையடி ஊற்று217)ஒல்லிக்குளம்218)ரிதிதென்னை219)வெருகல்220)மாவிலங்கத்துறை221)பிரம்படித்தீவு222)இராஜபுரம்223)மாவளையாறு224)காந்திபுரம்225)காந்தி கிராமம்226)பொறுகாமம்227)நவகி நகர்228)வம்மியடியூற்று229)செல்வாபுரம்230)சங்கபுரம்231)சின்னவத்தை232)அம்மன்குளம்233)மணிச்சறிமாறி234)கெளுத்திமடு235)வடமுனை236)ஊத்துச்சேனை237)கள்ளிச்சை238)மருதநகர்239)நெல்லிக்காடு240)மாவடியோடை241)கூளாவடி242)கண்ணகிநகர்243)மாதவணை244)மயிலத்தைமடு246)பிள்ளையாரடி247)நாவக்கேணி248)இராஜபுரம்249)மண்முனை250)களிமடு251)புளியடிமடு252)ஊத்துமடு253)பழங்குடிப்புமடு254)பம்பரச்சேனை255)தூத்தன்சேனை256)கொல்லநூறு257)இரும்பாண்டகுளம்258)ஆனையாண்டசேனை259)சலம்பொக்கனை260)மண்டம்பொக்கனை261)கட்டக்காடு262)பொன்னாங்கன்னித் தோட்டம்263)மண்டபத்தடி264)வேட்டையன்சேனை265)காயன்மடு266)வெள்ளமச்சேனை267)காயன்குளம்268)வேடன்குளம்269)கரடிப்புவல்270)கரடிக்குளம்271)பள்ளக்காடு272)இருட்டுச்சேனைமடு273)காயன்காடு274)கிளிவாயடி275)பேத்தாழை276)உப்போடை277)பெரிய உப்போடை278)வேலூர்279)நெடியவெட்டை280)காக்காச்சி வெட்டை281)பலாச்சோலை282)பாலமுனை283)தம்பலவத்தை284)மிச்நகர் (ஏறாவூர்)285)மீராகேணி (ஏறாவூர்)286)தவூத்கிராமம் (ஏறாவூர்)287)சம் சம் கிராமம்(ஏறாவூர்)288)ஸகாத் கிராமம்(ஏறாவூர்)289அப்துல் மஜீத் புரம்(ஏறாவூர்)290பாலையடித்தோணா291)விநாயகபுரம்292)தேவாபுரம்293)புளுக்குணாவ294)அடைச்சகல்லு295)நாற்பதாம் வட்டை296)மங்கிகட்டு297)கோடைமேடு298)முருங்கத்தீவு299)கவுடாதீவு300)பூச்சிக்குடு 301)சமுத்திரபுரம்302)சிவபுரம்303)பாரதிபுரம்304)முறாவோட305)நாசுவந்தீவு306)வம்மிவட்டவான்307)நடராஜானந்தபுரம்308)கண்ணபுரம்

புலம்பெயர் தமிழர்கள் விடயத்தில் நிலையான கொள்கை வேண்டும்

(எம். எஸ். எம் ஐயூப்)

இலங்கையில், அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையிலான போர் முடிவடைந்து, கடந்து சென்ற 13 ஆண்டுகளில், இலங்கை அரசாங்கங்கள், இரண்டு முறை புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளைத் தடை செய்துள்ளன. இரண்டு முறை, சில அமைப்புகளின் மீதான தடையை நீக்கியுள்ளன. கடந்த வாரம் இரண்டாவது முறையாக, அவ்வமைப்புகள் மீதான தடையை, அரசாங்கம் நீக்கியுள்ளது.