சோவியத்தின் கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது (பகுதி 5)

(சாகரன்)

ரஷ்யா, உக்ரேன், அமெரிக்கா

மேற்குலக நாடுகளும் அவர்களின் ஊடகங்களும் ரஷ்யா உக்ரேன் மீது ஒரு தலைப்பட்சமாக போர் தொடுத்துவிட்டது என்ற பிரச்சாரங்களுக்கு மத்தியில் நேட்டோ நாடுகள் கொடுத்த… கொடுத்து வரும் ஆயுங்களைக் கொண்டு ரஷ்யாவின் உக்ரேனின் தலை நகரை நோக்கிய நகர்வை எதிர்த்து உக்ரேன் படைகள் போர் செய்து கொண்டிருக்கின்றனர்.

‘அமீனா புகுந்த வீடும் அமெரிக்கா புகுந்த வீடும் உருப்படாது!’

(Rathan Chandrasekar)

ஒன்று தோன்றுகிறது.

சொல்கிறேன்.

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும்

உருப்படாது என்பார்கள்.

ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான போர்

ஐரோப்பிய யூனியன்

பார்லிமெண்ட் கூட்டம்.

காணொளியில் பேசுகிறார்

உக்ரெய்ன் செலென்ஸ்கி.

கேட்டுக்கொண்டிருக்கிறவர்கள் –

“போரில் பின்வாங்கமாட்டேன் “

என்று செலென்ஸ்கி சொன்னவுடன் –

ஒரு ஆள் பாக்கி இல்லை –

எழுந்து நின்று கைதட்டுகிறான்.

எல்லாரும் ரஷ்யாவை பின்வாங்கச் சொன்னவன்.

எல்லாரும் ரஷ்யாவுக்குத் தடை போட்டவன்.

‘பேச்சுவார்த்தைக்குப் போ ‘

என்று உக்ரெய்னிடம்சொல்லாதவன்.

‘ஏன் குடிமக்கள் கையில் ஆயுதம் கொடுக்கிறாய்,

அவர்களைக் கேடயமாக்குகிறாய்’ என்று

செலென்ஸ்கியிடம் கேட்காதவன்.

அத்தனை பேரும் -இவ்வளவு வருடங்களாக

உக்ரெய்ன் தேசியவாதக் குழுக்களுக்கு

உக்ரெய்ன் ராணுவத்தின்மூலம்

ஆயுதம் கொடுத்து

உக்ரெய்ன் வாழ் ரஷ்ய குடிமக்களை

ஒடுக்கி வைக்கச் செய்தவன்.

அத்தனை பேரும் –

சண்டை நின்று விடக்கூடாது என்று

இப்போது மூட்டை மூட்டையாக

உக்ரெய்னுக்கு ஆயுதத்தை அனுப்புகிறவன்.

அவர்கள் முன் முஷ்டி உயர்த்தும் செலென்ஸ்கி

“போரில் பின்வாங்கமாட்டேன்!” எனும்போது

எழுந்து, கைதட்டி ஆரவாரிக்கிறார்கள்.

இந்தப் போர் அமெரிக்காவுக்கும்

நேட்டோவுக்கும் செலென்ஸ்கிக்கும்

இனிக்கிறது என்று நான் எழுதியதன் –

இந்தப் போர் உக்ரெய்னுக்கு ஆகாது;

ரஷ்யாவுக்கும் கூடாது;

ஆனால், அமெரிக்காவுக்குத்

தேவையாக இருக்கிறது என்று

ரஷ்யா, உக்ரெய்ன் கம்யூனிஸ்டு கட்சிகள்

சொன்னதன் –

பொருள்

விளங்குகிறதல்லவா?

(Rathan Chandrasekar)

ரஷ்ய உக்ரேன் யுத்தத்தின் பலிக்கடாக்கள்

(மொஹமட் பாதுஷா)

உலக வரலாற்றில் முக்கால்வாசிப் பக்கங்கள் போர்களாலேயே நிரம்பியுள்ளன. நில ஆக்கிரமிப்புக்கான போர், நில மீட்புக்கான போர், அதிகாரத்தை அதிகரிப்பதற்கான போர், இன, மத ரீதியான போர் என இது நீட்சி கொள்கின்றது. ஏன் மண்ணுக்கான போர் மட்டுமன்றி பெண்ணுக்கான போர்களும் நடந்தேறியுள்ளன.

ரஷ்யா… உக்ரெய்ன்…

‘இரண்டு நாடுகளின்

தலைவர்கள் மட்டுமே

பேசித் தீர்ப்பதாயிருந்தால்

இரு குவளை மதுவோடு

நின்றுவிடும் போர்!’

இவ்விதம் ஓர்

அருமையான

பதிவைப்

பதிந்திருந்தார் ஜீவா சுப்பிரமணியன்.

Jeeva Subramaniyan

சோவியத்தின் கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது (பகுதி 4)

(சாகரன்)

தடைகளும், படைகளும் விடைகளை கொடுக்காது… போரை நிறுத்தாது… சமாதானத்தை ஏற்படுத்தாது…. மாறாக தடையற்ற பேச்சுவார்த்தைகள் விட்டுக் கொடுப்புகள்தான் போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்தும். மனித குலம் கடந்து வந்த வரலாறு அவ்வாறானது. அந்த சமாதானத்தை வேண்டியே தொடர்கின்றேன்..

சோவியத்தின் கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது (பகுதி 3)

(சாகரன்)

ரஷ்யா உக்ரேன் அமெரிக்கா

நீண்ட நாட்களாக தனி நாடு அமைக்க போராடி வரும் உக்ரைனின் கிழக்கே அமைந்த டொன்பாஸில், ரஷ்ய மொழி பேசும் டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் ஆகியவற்றை தனி நாடுகளாக அங்கீகரித்து அமைதியை நிலைநாட்ட அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் படைகளை அனுப்பிவிட்டார்.

சோவியத்தின் கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது (பகுதி 2)

(சாகரன்)

ரஷ்யா உக்ரேன் அமெரிக்கா

போர் வந்து விடும்…. வந்து விடும்…. என்று நேட்டோ நாடுகள் தம்மால் முடிந்தளவு ஆயுதங்களை உக்ரேனுக்கு விற்றுக் கொண்டு இருக்கின்றார்கள்….! அந்த மக்களுக்கு சுபீட்சமான வாழ்வை ஏற்படுத்துவதற்கான பொருளாதார உதவிகளை விட இந்த கருவிகளை விற்பனை செய்யும் வியாபாரம் கோலோச்சும் இன்றைய பதற்றமான கால கட்டத்தில் போர் வேண்டவே வேண்டாம் பேச்சுவார்தைகள் மூலம் சமூக நிலை ஏற்பட வேண்டும் என்ற எமது எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டாவது பகுதியை தொடருகின்றேன்….

சோவியத்தின் கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது (பகுதி 1)

(சாகரன்)

ரஷ்யா, உக்ரேன், அமெரிக்கா

போரற்ற உலகம் வேண்டும் பொறுமை காக்கும் தலைவர்கள் வேண்டு;ம். பொது மக்கள் தெரிவு செய்யும் அரசுகள் வேண்டும். பொதுவில் சகலருக்குமான வாழ்வும் வேண்டும். இதற்கு வளங்கள் வாய்ப்புகள் சந்தோஷங்கள் சமமாக பகிரப்படவும் வேண்டும்.

கனடாவில் பார ஊர்த்திகளின் போராட்டம்

(Rathan Ragu)

மூன்று வாரங்களுக்கு மேலாக கனடாவில் பார ஊர்தி தொழில் நிறுவனத்தினர் கனடாவின் தலை நகரில் களங்கொண்டு போராட்டங்களை நடாத்திவருகின்றனர்.