பாலஸ்தீனம்

“எனது நாட்டில் ஒரு சாண் நிலம்
எஞ்சி இருக்கும்வரை
என்னிடம் ஒரு ஒலிவ் மரம் எஞ்சி இருக்கும்வரை
ஒரு எலுமிச்சை மரம்
ஒரு கிணறு, ஒரு சப்பாத்திக் கள்ளி
எஞ்சி இருக்கும்வரை
ஒரு சிறு நினைவு
ஒரு சிறு நூலகம்
ஒரு பாட்டனின் புகைப்படம், ஒரு சுவர்
எஞ்சி இருக்கும்வரை
அரபுச் சொற்கள் உச்சரிக்கப்படும் வரை
நாட்டுப் பாடல்கள் பாடப்படும் வரை
கவிஞர்கள்
அந்தர் அல் -அப்ஸ் கதைகள்
பாரசீகத்துக்கும் ரோமுக்கும் எதிரான
யுத்த காவியங்கள்
எனது நாட்டில் இருக்கும் வரை
எனது கண்கள் இருக்கும் வரை
எனது உதடுகள், எனது கைகள்
எனது தன்னுணர்வு இருக்கும் வரை
விடுதலைக்கான பயங்கரப் போரை
எதிரியின் எதிரில்
நான் பிரகடனம் செய்வேன்”.

  • மஹ்மூத் த‌ர்வீஷ்
    தமிழில் எம். ஏ. நுஃமான்
    பலஸ்தீனக் கவிதைகள்
    மூன்றாவது மனிதன் வெளியீட்டகம்

(Jeeva Satha)

எங்கே போவேன் நான்

எங்கே போவேன்

முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு

எங்கே போவேன் நான்

எங்கே போவேன்

எண்ணத்தில் பல வண்ணத்தில்

முதலில் என்கால் இடறியது

செட்டியின் பிண்டத்தில்

துரையப்பா

தார்போட்டெரித்த ரொலோ பிண்டங்கள்

காத்தான்குடி பள்ளிவாசல்

ஈறாக கேதீஸ்வரன்

முகமும் பெயரும் தெரியாத

வயித்துப் பிழைப்புக்காக

தினமுரசு வினியோகித்த பையன்

சிங்கள அரசியல்வாதிக்கு

திருநீறு பூசிவிட்ட ஐயர்

இவளவற்றையும் கடந்தும்

முள்ளிவாய்க்கால் போய்சேர்ந்தேன்

கஞ்சி

வரதண்ணா ஒரு சகாப்தம்

இயலாத தாய்
சுட்டு வைத்த பணியாரம்
சிறுபிள்ளை பிராயத்தில்
கடை முழுதும் சென்று விற்றீர்…
விற்று வீடுவந்து
கல்வி தாகத்தால்
பள்ளிக்கும் ஓடுவீர்..

(“வரதண்ணா ஒரு சகாப்தம்” தொடர்ந்து வாசிக்க…)

27 வது தியாகிகள் தினம்

(19.06.2017 தியாகிகள் தின அஞ்சலிக்கவிதை)
………………………………………………………………..
விடுதலைப் பறவை தோழர் பத்மநாபா
.
இந்த விடுதலைப் பறவையின்
இமைகள் மூடிவிட்டனவா -இல்லை
மூடப்பட்டன.

இதயமில்லா இராட்ஷதர்
பாசிச அசுரர்
இரத்த வெறியின்
குத்தகைக் காரர் -புலிகள்
புரிந்த கொடுமையில்
இமைத்தான் மூடின .

இந்த புரட்சிப் பறவையின்

இதயம்
என்றும் விழித்திருக்கும் -அதன்
சுதந்திரகீதம்
விடுதலை போரில்
கலந்தொலிக்கும் .

ஈழ மண் வாசனையிலும் -இனி
இப்பறவையின் நேசமும்
கலந்தேவீசும்
பறந்து விரிந்த இதன்
சிந்தனைச் சிறகு
பட்டாளி மக்களுக்கு
நிழலாகும்

இது நிஜமாகும் -நாம்
நிஜங்களை தூங்குபவர்கள்
நிதர்சனப் பார்வையில்
வளர்ந்தவர்கள்-எமை
வளர்த்த இப்பறவையின்
கீதத்தை மீண்டும் – மீண்டும்
மீட்டீயே தீருவோம் .

ஆம்.
இந்த பறவையின்
இமைகள் மூடவில்லை .

எம்
இதயங்களில்
விழித்திருக்கிறது -ஈழ
விடுதலையைக் காண
விழித்தே இருக்கிறது

.
தியாகிகளின் சமாதிளே எங்கள் ஆராதனைக்குரிய தேவாலயங்களாகும்
.
பத்மநாபா மக்கள் முன்னணி -சுவிஸ்

ஈழ விடுதலை போராட்டத்தில் காவியமான தோழர்கள் நினைவாக.

இனிய தோழர்களே நான் உங்களை நினவு கூருகிறேன்.

காரணம் நீங்கள் என்னுடன் கல்வி கற்றதால் அல்ல,

நாம் ஒன்று கூடி கால்ப்பந்தோ அல்லது மென் பந்தோ விளையாடியதால் அல்ல.

என் சுக துக்கங்களில் கலந்து கொண்டதால் அல்ல.

உங்கள் உணவை என்னுடன் பகிர்ந்ததால் அல்ல.

நாம் விரும்பி இணைந்த ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில்

ஆயுதம் ஏந்தி மக்களுக்காக போராடி நீங்கள் மரணித்த ஒரே ஒரு காரணம் மட்டும் தான்,

என் இதயத்தில் உங்கள் நினைவை விருட்சமாய் வளர செய்து,

உங்கள் நினைவுகளை நிலைக்கச் செய்தது.

கும்பகோணம் சிவபுரம் முகாமில் பயிற்சி முடித்து பாக்குநீரிணையை கடக்கையில்,

காரைநகர் கடல் படை தள தாக்குதலில், யாழ்ப்பாணத்தில், வன்னியில்,

திருமலையில், மட்டக்களப்பில், அம்பாறையில் என எம் ஈழ மண்ணில்,

எதிரியுடன் மோதி மட்டுமல்ல சகோதர அமைப்பின் தலைமையின் தவறான முடிவால்

தெருக்களிலும், சிறைபட்டும் கந்தன் கருணை இல்லத்திலும்,

தாய் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை கோடம்பாக்கம்

சக்காரியா கொலனி, பவர் அப்பாட்மன்ற் தொடர்மாடி

ஐந்தாம் இலக்க வீட்டில் வைத்து, நிராயுதபாணிகளாக இருந்த வேளை,

தலைவருடன் அனைவரையும் துப்பாக்கி ரவை கொண்டு உருத்தெரியாமல் அவர்களின் முகம் சிதைத்த

தினத்தை மனதில் இருத்தி, உங்கள் அனைவரையும் நினைத்து,

ஆண்டுதோறும் ‘’தியாகிகள்’’ தினம் அனுஸ்டிக்கும் உங்கள் தோழர்கள் போலவே,

நானும் தனித்திருந்து உங்களை நினைவு கூருகிறேன்.

‘’புனிதராகி போனவரே உங்கள் புகழ் உடல் நித்திலம் ஆனது’’.

– ராம் –

“கீழ்வெண்மணி”

(டிசம்பர் 25 , 1968)
வர்க்கப் புரட்சியின் அடையாளம்
சொந்த நிலத்தையும்
சொந்த நலத்தையும்
ஆண்டைகளிடம் பறிகொடுத்தது …

(““கீழ்வெண்மணி”” தொடர்ந்து வாசிக்க…)

மார்கழி 13

நேற்றைய இரவுகள்
இப்படித்தான் விடிந்தன…

காற்றுப் புகமுடியாத
இடங்களில் எல்லாம்
தோற்றுப் போனவர்கள்
கண்ணி வைத்து
காவல் இருந்தனர்……

ஆம்….. மார்கழி 13
அதுவும் ஓர் .கர்நாள்…….

(“மார்கழி 13” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளி வாய்க்காலுக்கு முன்னைய காலங்களில் இடம்பெற்ற சகோதரப் படுகொலைகளின் போது

இரத்தம் ஒரே நிறமல்ல //யார் சொன்னது அப்படி.. உலகெங்கும் வெடிக்கும் கலவரங்களிலும், யுத்தங்களிலும் வடியும் இரத்தம் எல்லாமே ஒரே நிறம்தான் அவற்றின் கொடுமையும் ஒரே நிறம்தான்.

.முள்ளி வாய்க்காலுக்கு முன்னைய காலங்களில் இடம்பெற்ற சகோதரப் படுகொலைகளின் போதும், முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போதும் வடிந்த இரத்தவெள்ளங்களில் மக்கள் தம்மை மறந்து கடந்து போகத்தான் செய்தார்கள் ..அந்தக் கொடூரமான நினைவுகளைப் பலரும் எழுதினார்கள் ….சொன்னார்கள்…இங்கே வரும் கவிதை வரிகளில் அச்சொட்டாக அந்த வலியை உணர்கின்றேன்……..

(“முள்ளி வாய்க்காலுக்கு முன்னைய காலங்களில் இடம்பெற்ற சகோதரப் படுகொலைகளின் போது” தொடர்ந்து வாசிக்க…)

அம்மாவிற்கு அன்பு மடல்

அம்மாவிற்கு
அன்பு மடல்
எழுதி வைத்துவிட்டு
பொழுது சாயும் முன்னே
போனவன் இன்னும்
வீடு திரும்பவில்லை……

(“அம்மாவிற்கு அன்பு மடல்” தொடர்ந்து வாசிக்க…)

இன்று மார்கழி 13

ஈழக்கனவேந்தி நான்
தேர்ந்தெடுத்த
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
தடை செய்யப்பட்ட நெருப்பு நாள்…

நானும் போராடப்புறப்பட்டவன்…

சுதந்திரதிற்காக
போராடும் எனது உரிமை
மறுக்கப்பட்ட நாள்..

யார் மறப்பினும்
நான் மறப்பேனா?…

என் தாய் தந்தாள்
முட்டைப்பொரியலும்
குத்தரிசி சோறும்…

போடா நீ
போர்க்களம்
நோக்கி போ என்று……

அனுப்பினாள்…

போராடும் என் உரிமையை
மறுத்தவன் யாரடா?….
(Comrade Vinthan)