முள்ளி வாய்க்காலுக்கு முன்னைய காலங்களில் இடம்பெற்ற சகோதரப் படுகொலைகளின் போது

இரத்தம் ஒரே நிறமல்ல //யார் சொன்னது அப்படி.. உலகெங்கும் வெடிக்கும் கலவரங்களிலும், யுத்தங்களிலும் வடியும் இரத்தம் எல்லாமே ஒரே நிறம்தான் அவற்றின் கொடுமையும் ஒரே நிறம்தான்.

.முள்ளி வாய்க்காலுக்கு முன்னைய காலங்களில் இடம்பெற்ற சகோதரப் படுகொலைகளின் போதும், முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போதும் வடிந்த இரத்தவெள்ளங்களில் மக்கள் தம்மை மறந்து கடந்து போகத்தான் செய்தார்கள் ..அந்தக் கொடூரமான நினைவுகளைப் பலரும் எழுதினார்கள் ….சொன்னார்கள்…இங்கே வரும் கவிதை வரிகளில் அச்சொட்டாக அந்த வலியை உணர்கின்றேன்……..

.//இந்த நிலத்தில்
இது நடந்தது
,ஒரு நாள்
அழுகுரல்களின்
இடிமுழக்கம் கேட்டது.
.வெறிக்கூச்சல்கள்
மின்னல் வெட்டின
.சதுக்கங்களிலும்,
வீதிகளிலும்,வீடுகளிலும் ,
தெருக்களிலும் ,வயல் வெளிகளிலும்
,ரத்தச் சுனைகள்
திறந்தன.
நிலமெங்கும்
நுரை பொங்க
ஓடியது
.இரத்த ஆறு
.அவர்கள்
நடுக்கமின்றி
,இரத்தம் பார்க்கப் பழகிக்கொண்டார்கள்
.பிறகு,
இரத்தத்தைப் பார்த்துக்கொண்டே
தேநீர் பருகினார்கள்,
ரத்தத்தைப் பார்த்துக் கொண்டே
குடித்தார்கள்.
ரத்தத்தைப் பார்த்துக்கொண்டே
கதை பேசினார்கள்
.ரத்த ஓடையருகில்
புணர்ந்தார்கள்
.ரத்தத்தை மிதித்தபடி
அலுவல் பார்த்தார்கள்
.ரத்தப் பெருக்கின் நடுவில்
நாற்காலிபோட்டு அமர்ந்தார்கள்.
பின்னர்
,விருந்துக்குத் தம்மை
அலங்கரித்துக்கொண்டு
உடன் பிறப்புக்களே.
,ரத்தத்தின் ரத்தங்களே
இனமான சொந்தங்களே
என்றபடி
,எங்கள் இரத்தத்தைக் குடிக்கத் தொடங்கினார்கள்.

..நாங்கள் தீர்க்கமாய்
புரிந்து கொள்ளும்படி
மரணம்
வலியுடன்
சொன்னது
,,நாங்கள் வேறு
அவர்கள் வேறு
எவர் அங்கே சொல்வது
நாமெல்லாம் தமிழரென்று ?

—–”ஞாபக விலங்கு” —-அழகிய பெரியவன்.—–