“எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில்களில் போட்டியிடும் 56,066 வேட்பாளர்களுள் 50 பேர், தேர்தலில் போட்டியிடுவதற்கே தகுதியற்றவர்கள்” என மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.
Category: செய்திகள்
பொங்கி எழுந்தார் மைத்திரி
- அமைச்சரவையில் கடும்சொற்போர்
- ஒரு மணிநேரம் மைத்திரி மாயம்
- சமாதானப்படுத்தி அழைத்துவந்தார் ரணில்
வாராந்த அமைச்சரவைக் கூட்டம், கடுமையாக சூடுபிடித்திருந்த நிலையில், கடுமையாக கோபம்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து எழுந்துசென்றுவிட்டதாக, ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிகழ்வு…
கிழக்குப் பல்கலைக் கழக கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு, இன்று (16) நடைபெற்றது. நுண்கலை இளங்கலை பட்டப்படிப்பிற்காக பதிவு செய்யப்பட்ட 221 பேர் இதன்போது வரவேற்கப்பட்டனர்
மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்- தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்
யாழ்ப்பாணம் வை. எம். சி. ஏ மண்டபத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவர் தோழர் தி.ஸ்ரீதரன் (சுகு) மற்றும் வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் தோழர் அ.வரதராஜப் பெருமாள் மற்றும் கட்சியின் செயலாளர் தோழர் சிவராசா மோகன் ஆகியோர் இணைந்து இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைத்தனர். ஆறு இடங்களில் மட்டும் வடக்கு கிழக்கில் போட்டியிடும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர் மற்றயவர்களைப் போலல்லாது உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளிட்டு தமது முழுமையான செயற்பாட்டுத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளர். ஊழலற்ற வினைத்திறன் மிக்க உள்ளுராட்சி செயற்பாடு என்பது இவர்களின் தேர்தல் கோஷமாக இருக்கின்றது.
வீண் விரயமாகும் நீர் வடக்கு மற்றும் வடமத்திக்கு
களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் உபயோகப்படுத்தப்படாமல் கடலுக்கு அனுப்பப்படும் நீரை, வடக்கு மற்றும் வடமத்திய பிரதேசங்களுக்கு அனுப்பும் வேலைத்திட்டம் ஒன்றை இந்த வருடம் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மெதிரிகிரிய பகுதியில் நேற்று (11) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
திருகோணமலையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்
திருகோணமலையில் இன்று நடைபெற்ற தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர். சிறப்பாக பெண்களின் பிரசன்னம் அதிகமாக இருந்தது. இதில் கட்சியின் தலைவர் சுகு சிறீதரன் உரையாற்றினார் ஊழல் அற்ற வினைத்திறன் மிக்க உள்ளுராட்சி நிர்வாகத்தை ஏற்படுத்த தாம் செயற்படப் போவதாக இதில் மக்கள் எம்மோடு இணைந்து பயணிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். மக்களுடன் இணைந்து மக்களுக்கான ஆட்சியை அமைகப் போவதாக முன்னாள் வடக்கு கிழக்குமாகாண முதல் அமைச்சர் வரதராஜப் பெருமாள் தனது உரையில் தெரிவித்தார் மேலும் திருகோணமலை நகர சபையின் முதன்மை வேட்பாளர் சத்தியன் சிவகுமார் தான் தொடர்ந்தும் திருகோணமலை மக்களுடன் இணைந்து பல்வேறு மக்களுக்கான பணிகளை செய்துவருவதாகவும் பாடசாலைப் பிள்ளைகளுக்கான உபகரணங்கள் சீருடைகள் பெண்தலைமத்துவக் குடும்பங்களுக்கான செயற்திட்டங்கள் இளைஞர்களை சமூகத்தில் முன்னிறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார். கூடவே தன்னுடன் இணைந்து மக்களுக்காக பணியாற்றிவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி ஊள்ளுராட்சித் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பவர்களையும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்
தமிழக அகதிகள் முகாம்களில்; இந்திய உள்துறை அமைச்சின் அதிகாரிகள் திடீர் விஜயம்.
(அ.விஜயன்)
இந்திய உள்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் மறுவாழ்வுத்துறையினரும் இணைந்து தமிழகத்தின் 24 மாவட்டங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி மக்களை பார்வையிட்;டு வருகின்றனர். Ministry of home affairs இல் இருந்து 8 உயர் அதிகாரிகள் முகாம்களைப்பார்க்க விஜயம் செய்துள்ளனர். இவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து தமிழக அகதிகள் மறுவாழ்வுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கத்தினருடன் இணைந்து முகாம்களை தை 5ம் திகதியில் இருந்து 8ம் திகதி வரை பார்த்து வருகின்றனர்.
(“தமிழக அகதிகள் முகாம்களில்; இந்திய உள்துறை அமைச்சின் அதிகாரிகள் திடீர் விஜயம்.” தொடர்ந்து வாசிக்க…)
‘இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டாமைக்கு பேரினவாத தேசியக் கட்சிகளே முட்டுக்கட்டை’
‘நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள இனப்பிரச்சினை தொடர்பில், தந்தை செல்வா முதல் சம்பந்தன் ஐயா வரை அனைவரும் பேச்சுவார்தைகளில் ஈடுபட்ட போதிலும், இதுவரை இறுதி முடிவு கிடைக்காமைக்கு, பேரினவாத தேசிய கட்சிகளே காரணம்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
‘இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார்’
“சூழ்நிலையைத் தவறவிடாது, தமிழினம் தழைக்க ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றே எனது அறிக்கை அமைந்திருந்தது. ஆனால், அவரோ இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார்” என, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார். வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கின்ற அறிக்கை தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
(“‘இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார்’” தொடர்ந்து வாசிக்க…)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 260 முறைப்பாடுகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 260 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்ட விதிமுறைகள் தொடர்பில் சுமார் 245 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
(“உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 260 முறைப்பாடுகள்” தொடர்ந்து வாசிக்க…)