குளிக்கும் பனிக்குமிடையே; தொடர்ந்தும் விவசாயிகள் போராட்டம்

மேலும், விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லை பகுதிகளில் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளால் தலைநகர் திணறி வருகிறது.

விவசாயிகள் போராட்டத்தில் நக்சலைட்டுகள் புகுந்து விட்டதாக அரசு கூறி வருவதை சுட்டுக்காட்டியுள்ள கெஜ்ரிவால், அந்த போராட்டத்துக்கு முன்னாள் இராணுவ வீரர்கள், மருத்துவர்கள், வணிகர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் ஆதரவு அளித்துள்ளதாக கூறியுள்ளார். அவர்கள் எல்லாம் நக்சலைட்டுகளா என்றும் டெல்லி முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.