
இந்தியா, பங்களாதேஷ் எல்லை தாண்டிய எரிசக்தி குழாய்கள்
இந்தியா- பங்களாதேஷ் நட்புக் குழாய் (IBFP) இந்தியாவில் இருந்து எரிபொருளை வழங்குவதற்கான நேரத்தையும் செலவையும் குறைக்கும் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான ஆற்றல் இணைப்பை மேம்படுத்தும். அஸ்ஸாமின் நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அண்டை நாட்டின் வடக்குப் பகுதிகளுக்கு ஆண்டுக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் டீசலை வழங்கும் திறன் கொண்ட எல்லை தாண்டிய பைப்லைனை இந்தியா மற்றும் வங்கதேசம் திறந்து வைத்தன.
நிலநடுக்கத்தில் இதுவரை 14 பேர் பலி
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவு
உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று (19) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், அவற்றின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் மாகாண ஆளுநர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது, உள்ளூராட்சி மன்றங்களை ஆணையாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓர் அரசியல் கைதியின் வேண்டுகோள்
காட்டெருமைகள் படையெடுப்பு: அச்சத்தில் மக்கள்
மட்டு. – அம்பாறை எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வரும்
“காலாகாலமான பிரச்சினையாக இருந்து வருகின்ற அம்பாறை- மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரச்சினை இனியும் தொடரக்கூடாது. இரு மாவட்டச் செயலாளர்களின் கலந்துரையாடலோடு, ஜனாதிபதியின் இணக்கப்பாட்டோடு, இது தீர்த்து வைக்கப்படும்”. இவ்வாறு கல்முனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரணிலை விரட்டும் ஆட்டத்தை விரைவில் ஆரம்பிப்போம்
“ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு முக்கிய இடத்தை வகித்தது. எனவே, ரணில் – ராஜபக்சவை விரட்டுவதற்கான ஆட்டத்தையும் விரைவில் ஆரம்பித்து, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், அக்கட்சியின் பெண்கள் அமைப்பின் முக்கியஸ்தருமான ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்தார்.
பலருக்கும் மது கசந்தது
இலங்கையை பொறுத்தவரையில் மதுபானங்களை பருகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கின்றனமை கண்டறியப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் இந்த நாட்டின் கலால் வரி வருமானம் 350 கோடி ரூபாவினால் குறைந்துள்ளது என கலால் திணைக்கள அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது.