முஸ்லிம்களின் இனவிகிதாசாரத்துக்கு ஏற்ப காணி இல்லை

(மொஹமட் பாதுஷா)
மரணித்த பிறகு, எல்லோருக்கும் அதிகபட்சம் ஆறடி நிலம்தான் சொந்தம். என்றிருந்தாலும், உலகத்தில் வாழ்கின்றபோது, தனிமனிதர்களும் குழுக்களும் அரசாங்கங்களும் நாடுகளும் நிலத்துக்காக நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. சர்வதேச அளவில் மண்ணுக்காக நடந்த யுத்தங்கள்தான் அதிகம். காணிப் பிரச்சினையும் நிலப்பற்றாக்குறையும் உலக அளவில் பொதுவாக எல்லா நாடுகளிலும் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினை என்றாலும், இன, மத அடிப்படையிலோ அல்லது ஆளுகைக் கட்டமைப்பு ரீதியாகவோ வேறுபட்டுள்ள மக்கள் கூட்டத்தாரிடையே இந்நிலைமை தீவிரமாகக் காணப்படும்.

(“முஸ்லிம்களின் இனவிகிதாசாரத்துக்கு ஏற்ப காணி இல்லை” தொடர்ந்து வாசிக்க…)

இராணுவத்தினர் மீது வாள்வெட்டு: அறுவர் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில், இராணுவ வீரர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில், அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், இராணுவத்தில் சேவையாற்றி விடுமுறையில் சென்ற இருவரே, காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். (“இராணுவத்தினர் மீது வாள்வெட்டு: அறுவர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

உலகில் ஏற்பட்டுவரும் ஜனநாயக பன்முகத்தன்மை மறுப்பு

(சாகரன்)

உலக அரசியலில் மூன்று விடயங்கள் என்னை ரொம்பவும் சிந்திக்க வைத்துள்ளது. உலகம் மீண்டும் ஒரு உலக யுத்தத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றவோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இனவெறி, நிறவெறி, தனிமனித அல்லது தனிக்குழு ஏகாதிபத்தியத்தின் ஆட்சியை நிறுவ முயன்று 2ம் உலகப் போருக்கு காரணமான ஹிட்லரின் நாஜி ஒத்த செயற்பாடுகளை வளர்த்தெடுத்து உலகத்தின் இருப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடுமோ..? என்ற எண்ணத் தோன்றுகின்றது. அவையாவன: (“உலகில் ஏற்பட்டுவரும் ஜனநாயக பன்முகத்தன்மை மறுப்பு” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாணத்தில் புதிய அமைச்சர்கள் நியமனம்

வடமாகாணத்தின் புதிய அமைச்சர்கள், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து, ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் இன்று( 23) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். நிதி மற்றும் திட்டமிடல்,சட்டம் மற்றும் ஒழுங்கு காணி, மின்சாரம், வீடமைப்பு மற்றும் புனரமைப்பு, சுற்றுலா, உள்ளுராட்சி, மாகாண நிர்வாகம், வீதி அபிவிருத்தி, ​மோட்டார் போக்குவரத்து அமைச்சராக வடமாகாண முதலமைச்சர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். வடமாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, சமூகசேவைகள்,கூட்டுறவு, வர்த்தக அபிவிருத்தி அமைச்சராக அனந்தி சசிதரனும், வடமாகாண சுகாதார சுகாதார அமைச்சராக குணசீலனும், வடமாகாண விவசாய மற்றும் கடற்றொழில் நீரியல்வள அமைச்சராக கந்தையா சிவநேசனும் தமது அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர்.

அமெரிக்கா: ஜனநாயகத்தை கட்டவிழ்த்தல்

ஜனநாயகம் என்றால் என்ன? என்ற வினாவுக்கான பொதுவான விடையேதும் இல்லை. இருந்தபோதும், அனைத்தினதும் அடிப்படையாக ஜனநாயகம் கருதப்படுகிறது. ஜனநாயகத்தின் இருப்பிடமாகவும் அதன் காவலனாகவும் அமெரிக்கா முன்னிலைப்படுத்தப்படுகிறது. கெடுபிடிப் போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கு, ஜனநாயகம் என்றால் அமெரிக்கா; அமெரிக்கா என்றால் ஜனநாயகம் என்ற கற்பிதத்தைக் கட்டமைத்திருக்கிறது. கட்டமைப்புகள் கட்டவிழும் காலமதில் ஜனநாயகமும் விலக்கல்ல; அமெரிக்காவும் விலக்கல்ல.

(“அமெரிக்கா: ஜனநாயகத்தை கட்டவிழ்த்தல்” தொடர்ந்து வாசிக்க…)

மட்டுநகர் கல்லடி ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத் தொகுதியை, பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஆக்கிரமித்திருப்பதைக் கண்டித்து, மட்டக்களப்பு கல்லடிசுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக ஊழியர்கள், இன்று செவ்வாய்க்கிழமை 22.08.2017 கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள்நிறுவகத்துக்கு முன்னால் ஒன்று திரண்ட கல்விசார் மற்றும் கல்விசாராஊழியர்கள், கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத் தொகுதி மாணவர்கள்சிலரால் ஆக்கிரத்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும்நீதிமன்றம் விடுத்துள்ள கட்டளையை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும்போராட்டம் எனும் போர்வையில் எமது கலாசார விழுமியங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் உடனடியாக அம்மாணவர்கள், நிர்வாக கட்டடத்தொகுதியிலிருந்து வெளியேற வேண்டுமெனவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

பெண்களின் வாழ்க்கை விடுகதையாகவே தொடருமா?

(Niroshini)
பெண்கள் மீதான வன்முறை, ஒடுக்குமுறைக்கு எதிராக கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட போராட்டங்களின் விளைவால், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் ஓரளவுக்குக் குறைந்ததாகத் தென்பட்டாலும், அது தொடர்கதையாகவே இருக்கின்றது. பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளினதும் அதனால் பெண்கள் முகங்கொடுக்கக்கூடிய சவால்களினதும் வடிவங்களில் மாற்றம் பெற்றதே ஒழிய, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலையாக மாற்றம் பெற்றுள்ளது.

(“பெண்களின் வாழ்க்கை விடுகதையாகவே தொடருமா?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் ​மொழிச் சமூகங்களைப் பலி எடுக்கும் பிரித்தாளும் தந்திரம்

(எஸ்.கருணாகரன்)
‘பிரித்தாளும் தந்திரத்தில் பிரித்தானியர்களுக்கு நிகரில்லை’ என்று சொல்வார்கள். ஆனால், அவர்களையும் விடச் சிங்கள அரசியல் தலைமைகள் நிபுணத்துவம் மிக்கவை என்பது இலங்கையின் அண்மைய வரலாறு. இதற்கு மிக எளிய உதாரணம், 1970 கள் வரையில் இணக்கமாக, ஒருமுகப்பட்டிருந்த இலங்கையின் சிறுபான்மையினங்கள், இப்போது மிக ஆழமாகப் பிளவு படுத்தப்பட்டுள்ளன. அகரீதியாகவும் புறரீதியாகவும் இந்தப் பிளவு மிக ஆழமாகச் செய்யப்பட்டுள்ளது.

(“தமிழ் ​மொழிச் சமூகங்களைப் பலி எடுக்கும் பிரித்தாளும் தந்திரம்” தொடர்ந்து வாசிக்க…)

மதிப்பிற்குரிய ஐயா இ.தங்கராஜா அவர்கள் நினைவாக.

மட்டக்களப்பு நாவற்குடாவினை பிறப்பிடமாகக்கொண்டு கல்லடி சிவாநந்தா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கொழும்புமத்திய வங்கியின் சிரேஸ்ட நிர்வாக அதிகாரியாகக் கடமையாற்றிய திரு. இளயதம்பி தங்கராஜா அவர்கள் கனடாரொரன்ரோவில் இன்று (22-8-2017) காலமானார்.

(“மதிப்பிற்குரிய ஐயா இ.தங்கராஜா அவர்கள் நினைவாக.” தொடர்ந்து வாசிக்க…)

அபிவிருத்தி சங்க பொதுக்காணியில் பொலிஸ் நிலையம் மக்கள் கவலை

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒரே ஒரு காணியே உள்ளது.குறித்த காணி யுத்தம் முடிவடைந்த பின்னர் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டு அப்பகுதியில் பொலிஸ் நிலையம் இயங்கி வந்தது. தற்போது பொலிஸ் நிலையத்திற்கு என காணி வழங்கப்பட்டு அது வேறு ஓர் இடத்தில் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

(“அபிவிருத்தி சங்க பொதுக்காணியில் பொலிஸ் நிலையம் மக்கள் கவலை” தொடர்ந்து வாசிக்க…)