கம்போடியா பொல் பொட்டை விஞ்சும் புலிகளின் பிரபாகரன்

உலகிலேயே மோசமான சர்வாதிகாரியாக இருந்தவன் கம்போடியாவின் “பொல்பொட்” ஆவான். பொல்பொட் செய்த இன அழிப்பு, சித்திரவதைகள் மோசமானவை. புலிகள் செய்த சித்திரவதைகள் பெரும்பாலும் பொல்பொட்டின் பாணியிலேயே இருந்தன. ஆனாலும் புலிகளின் சித்திரவதைகள் பொல்பொட்டை மிஞ்சுவதாகவே இருந்தது. தோழர் மணியம் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்படும் புலிகளின் சித்திரவதைகள் போல பொல்பொட் செய்யவில்லை.

புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட மாற்று இயக்கத்தவர்கள், ஊடகவியலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், படையினர், புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர்கள், புலிகள் இயக்கத்திலிருந்து தப்ப்பியோட முற்பட்டோர் என்று பலர் மோசமான சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். துணுக்காய் சித்திரவதை முகாமிலிருந்த 5000 ற்கு மேற்பட்டவர்கள் யாரும் உயிருடன் மிஞ்சவில்லை.

புலிகளின் சித்திரவதை முகாம்களிலிருந்து ஒரு சிலரே உயிர் தப்பியுள்ளார்கள். அதிலொருவர் தோழர் மணியம். புலிகலின் சித்திரவதை முகாமில் தான் பட்ட சித்திரவதைகளை தேனீ இணையதளத்தில் தொடராக எழுதிவருகிறார்.

இங்கே காணப்படும் படங்களில் புலிகள் அழிக்கப்பட்டபோது படையினரால் கைப்பற்றப்பட்ட சித்திரவதை முகாம்களின் காட்சிகள். மேலே பொல்பொட்டின் சித்திரவதை முறைகளோடு புலிகளின் சிதிரவதை முறைகள் இணைக்கப்பட்டுள்ளன. புலிகளின் சித்திரவதை முகாம்கள் பெரும்பாலான புலிகளுக்குத் தெரியாது. பொட்டம்மானின் குழுவினர் ஒரு சிலருக்கு மட்டும்தான் அந்த ரகசிய இடங்கள் தெரிந்திருந்தன.

(Rahu Rahu Kathiravelu)