தில்லி எரிப்பு: மோடி, ட்ரம் ஆரத்தழுவல்

கிட்டதட்ட இதே நாளில் ஐந்து மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் கூஸ்ரன்(Houston) இல் ‘கௌடி மோடி”(Howdy Modi) என்று அதிக வரவேற்பை ‘உருவாக்கி’ நடைபெற்ற நிகழ்வில் மோடி அங்கு வைத்தே அடுத்த அமெரிக்க தலைவராக ட்றம் வரவேண்டும்… அதுதான் சரியான தெரிவு.. அவர்தான் வருவார் என்று ஒரு பாட்டுப் பாடிவிட்டு வந்தார்.

ஒரு நாட்டுத் தலைவருக்குரிய மரபுகளை மீறி இன்னும் சில காலத்தில் நடைபெற உள்ள அமெரிக்க தேர்தலை கருத்தில் கொண்டு இதனைத் தெரிவித்திருந்தார். இது பலரின் கண்டனத்தை பெற்றிருந்தது. மோடியின் ட்றம் மீதான விசுவாசத்தை காட்டியும் இருந்தது.

பல மக்களின் ஆதரவை ‘உருவாக்கி’ ஆட்சியதிகாரத்தை பிடித்துவிட்டேன் என்ற மமதையில் இதே ட்றம் ஐ தனது ஊருக்கு அழைத்து ‘நமஸ்தே ட்றம்”(Namaste Trump) என்று மோடி பதிலுக்கு ட்றம் இன் முதுகை சொறிந்து விட்டார்.

இருவரும் இன்றைய நிலையில் அதிகம் இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்புணர்வைக் கொண்ட உலகத் தலைவர்களாக செயற்படுவதே இருவரும் இரட்டைச் சொல்களில் இரு நாடுகளிலும் ஆர்ப்பரிப்பு சந்திப்புக்களை நடாத்தியதன் பின்னணியாகும். இந்த இணைப்பு ஒன்றும் ஆச்சரியமானது இல்லை. இந்த வெறுப்பு அரசியலின் அடித்தளத்திலேயே இருவரும் தேர்தல் வெற்றிகளை அமைத்துக் கொண்டனர்.

அண்மையில் இந்திய பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் அரசியலமைப்பை அப்படியே தூக்கிச் சாப்பிட்டு மதச்சார்பற்ற நாடு, மத நல்லிணக்கத்துடன் பல தேசியங்கள் வாழும் நாடும் என்பதை தூக்கி கடாசி விட்டு இந்தியா இந்துக்களுக்கே என்று (இந்து) சங்க பரிவார இராமர் அரசியலை நடத்த முனைகின்றது மோடி அரசு.

இதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகளும், எதிர்ச் சட்ட நடவடிக்கைகள், நீதிமன்ற ஏறல்கள், அவரவர்களின் மாநிலங்களில் தாம் இந்த புதிய குடியுரிமைச் சட்டத்ததை அமுல்படுத்த மாட்டோம் என்ற தீர்மானம் எடுத்து தமது எதிர்வினகளை தெரிவித்து வருகின்றனர்.

இதனுடன் நின்றுவிடாமல் தொடர் போராட்டங்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பல மாநிலங்களிலும் பல்வேறு மத்தினரும் இணைந்து புதிய குடியுரிமைச் சட்டதை மீள்பெறுமாறு போராட்டம் நடாத்தி வருகின்றனர்.

இப் புதிய சட்ட மூலம் முஸ்லீம்மக்களுக்கு மட்டும் அல்ல சகல பிரிவனருக்கும் பாதகமானதாக இருக்கும் என்ற வாதத்தை நிராகரிக்க முடியவில்லை. அம்பேத்காரால் உருவாக்கப்பட்ட சட்டமூம் இந்திய சுதந்திரத்தின் பின்பு இலங்கை போலன்று இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை நிறுவியே வந்திருக்கின்றது.

இந்தியாவின் அயல் நாடுகளில் இருந்து வந்து அகதிகளாக இந்தியாவில் இருப்பவர்களின் குடியுரிமை வழங்குதல், அல்லது நாடுகடத்தல் என்பதில் இஸ்லாமிய மதத்தினரை பிரதானப்படுத்தி அவர்களை குடியுரிமையற்றவர்களாக்கி நாடுகடத்தல் என்பது இதன் மையப் புள்ளியாக இருக்கின்றது.

இதற்கும் அப்பால் இலங்கை அகதிகள் விடயத்தில் இதற்கு மாறாக இஸ்லாமிய மதம் என்பதற்கு பதிலாக இலங்கை தமிழர் என்பதே நிராகரிப்பதற்கான முக்கிய காரணியாகின்றனர். இவ்வாறு மியான்மார், பங்களாதேஷ்;, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான் என்று தனித்தனியாக எடுத்துப் பார்த்தால் இந்த முரண்நகைகளை உணர முடியும். இங்கு மேலோங்கி நிற்பது ஒருவகை வெறுப்பு அரசியலே.

ஆனாலும் இவற்றில் எல்லாம் மேலோங்கி இருப்பது மோடியின் ஆட்சிக்காலத்தில் குஜராத்தில் நடாத்தப்பட்ட முஸ்லீம் படுகொலையும் இதனைத் தொடர்ந்த சம்பவவங்களும். அமெரிக்க தரப்பில் ஆப்கானித்தானில் ஆரம்பித்து ஈராக் சிரியா என்று வளர்சியடைந்த இஸ்லாமிய வெறுப்புணர்வே ஆகும்.

இந்த மோடி ட்றம் என்ற இருவரது இஸலாமிய மக்கள் மீதான் வெறுப்பு அரசியல் ஒரு புள்ளியில் சந்திக்கவே செய்கின்றது. இதற்கு வழமை போல் இஸ்லாமியத் தீவிரவாதத்தை வேரோடு அழித்தல் என்ற வர்ணச் சாயம் பூசப்பட்டுள்ளது.

இவற்றின் பின்னணிலேயே நேற்றைய தில்ல நடைபெற்ற இஸ்லாமி சகோதர்களுக்கு எதிரான வற்முறையும் அவர்களின் வழிபாட்டுத்தலம் சொத்துகள் எரிக்கப்பட்டது சூறையாடப்பட்டதை பார்க்க முடியும். இத்தனைக்கு குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் சங்க பரிவாரங்களைத் தவிர ஏனைய சகல இந்திய மக்களும் குறிப்பாக சீக்கிய மக்கள் அதிகம் முன்னிற்று போராடிய போதே இந்த கொலைகளும் வன்முறையும் நடைபெற்றிருக்கின்றன.

நீ இந்துவா…? இல்லையா….? என்று கேட்டே இந்து தீவிரவாதிகளால் நடைபெற்ற கலவரத்தில் இதுவரை 27 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். என்னைக் கொன்று விட்டுத்தான் இஸ்லாமியனைக் கொல்ல முடியும் என்று ஏனைய மதத்தினர் அரண் அமைத்து தடுப்புமைத்திருக்கின்றார்கள்.

ட்றம் உம் மோடியும் ஆரத்தழுவி நின்ற இந்த கணங்களில்… மோடி அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினர் முன்னிலையில் வன்முறையாளர்களுக்கு தாகசாந்தியிற்கு தண்ணீரை காவல்துறையினரே வழங்கி கலவரத்தை கொலைகளை செய்வித்தார்கள் என்றால் இரண்டு முஸ்லீம் வெறுப்புவாதிகளும் ஆரத்தழுவும் சந்தர்ப்பத்தை நாம் இங்கு ஒரு புள்ளியில் இணைத்துப்பார்த்தே ஆக வேண்டும்.

இந்தியா இந்து மத்தை மட்டும் தூக்கிப்பிடித்து எல்லாவற்றையும் இழக்கப் போகின்றதா அல்லது ஒரு ஆட்சி மாற்றத்தின் ஊடு நிமிர முடியாமல் சரியும் பொருளாதாரத்தையும், சரியும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வெறுப்பு அரசியலையும் களைந்து பல்தேசிய பல மதங்களை இணைந்து மதச்சாற்பற்ற ஜனநாயக நாடாக வெற்றி பெற போகின்றதா……..? வெற்றி பெற வேண்டின் இந்த ‘அணைப்பு’ நிச்சயம் உதவப் போவது இல்லை.