இலங்கையின் பொருளாதாரநோயைசமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics) பகுதி – 5

இந்தஆண்டின் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையானஏற்றுமதிகளைஅவதானித்தால் சென்றஆண்டின் இதேகாலகட்டத்தோடுஒப்பிடும் பொழுதுஅமெரிக்கடொலர் பெறுமதியில் சுமார் 1 பில்லியன் டொலர் அளவுக்குஏற்றுமதிவருமானஅதிகரிப்பை இலங்கைஈட்டியிருக்கிறது. இதில் சுமார் 650 மில்லியன் டொலர்கள் அதிகரி;ப்பைதைத்தஆடைகளின் ஏற்றுமதியேபெற்றுத் தந்திருக்கின்றது. அடுத்தபடியாகரத்தினக் கற்களின் ஏற்றுமதிவருமானம் சுமார் 100 மில்லியன் டொலராலும் கடலுணவுவகைகளின் ஏற்றுமதிவருமானம் சுமார் 25 மில்லியன் டொலராலும் அதிகரித்திருக்கின்றன. இக்காலகட்டத்தில் விவசாயப்பண்டங்களினால் பெற்றவருமானம் மொத்தத்தில் சுமார் 60 மில்லியன் டொலர்களால் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இயற்கைவிவசாயத்துக்குமாற்றுதல் என்றபெயரில் ரசாயனப் பொருட்கள்pன் இறக்குமதிநிறுத்தப்பட்டதால் தேயிலைஉட்பட இலங்கையின் விவசாயப் பண்டங்களின் உற்பத்தி 20 சதவீதத்துக்குமேல் வீழ்ச்சியடைந்ததுதெரிந்ததே. அதனால் அவைஒவ்வொன்றினதும் ஏற்றுமதியானதுதொகைரீதியில் வீழ்ச்சியடைந்தது. இருந்தபோதிலும் அவற்றுக்குகிடைத்தஏற்றுமதிவிலைசாதகமாகஅமைந்ததால் அவைஒவ்வொன்றினதும் மொத்தஏற்றுமதிவருமானத்தில் பெரிதளவுவீழ்ச்சிஏற்படவில்லை.

இந்தக் காலகட்டத்தில் ஏற்றுமதிசெய்யப்பட்டபொருட்களினதுசராசரிஅலகுவிலைச்சுட்டெண் கடந்தஆண்டோடுஒப்பிடுகையில் சுமார் 15 சதவீதத்தால் அதிகரித்திருக்கிறது. அதேவேளை,ஏற்றுமதிவருமானம் மொத்தத்தில் டொலர் கணக்கில் 10 சதவீதம் மட்டுமேஅதிகரித்திருக்கிறது. இதுவேஏற்றுமதிவருமானத்தின் அதிகரிப்புக்குக் காரணமாகிறது. இதனைஅரசாங்கம் தனதுகெட்டித்தனத்தால் ஏற்பட்டஏற்றுமதிஅதிகரிப்புபோலகாட்டிக் கொள்கிறது.

எத்தனைதான் செய்தாலும்
சீராக்கமுடியாதசென்மதிநிலுவை

  1. பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதியைஅரசாங்கம் கணிசமாகக் குறைத்திருக்கிறபோதிலும்,அதற்கானமொத்தச் செலவுகுறையவில்லை. பெற்றோலியபொருட்களின் உலகவிலைகடந்தஆண்டுடன் ஒப்பிடும் போதுசுமார் 20 சதவீதம் அதிகமாகஉள்ளமையேபிரதானமானகாரணமாகும். அதேபோலவே இறக்குமதிசெய்யப்படும் உணவுப் பண்டங்கள் உட்படஏறத்தாழ இறக்குமதிசெய்யப்படும் அனைத்துநேரடிநுகர்வுப் பொருட்களினதும் மற்றும் ஆக்கஉற்பத்திகளுக்கான மூலப் பொருட்கள் மற்றும் இடைநிலைப் பண்டங்களின் விலைகளும் கணிசமாகஉயர்ந்துள்ளன. இறக்குமதிகளைக் குறைத்தும் தடைசெய்தும் இறக்குமதிச் செலவைக் குறைக்கஅரசாங்கம் முயலுகின்றபோதிலும், இவ்வளவுக்கும் பிறகும் கூட பொருட்களின் மொத்த இறக்குமதிச் செலவுசுமார் 10 சதவீதமளவிற்குமட்டுமேகுறைந்திருக்கின்றது. இந்நிலையில் இந்தஆண்டுக்கானவர்த்தகநிலுவையின் பாதகமான இடைவெளி 6 பில்லியன் டொலர்களைஅண்மித்ததாகும். சென்றஆண்டு இந்த இடைவெளி 8 பில்லியன் டொலர்களாக இருந்தது. இறக்குமதிகளை இதற்குமேல் குறைத்தால் நாட்டில் எதிர்ப்புகளும் குழப்பங்களும் கட்டுப்படுத்தமுடியாதஅளவுக்குஏற்பட்டுவிடும் என்பதைஅரசாங்கம் புரிந்துகொண்டேஎச்சரிக்கையோடுசெயற்படுகிறது.

இந்தஆண்டுக்கான இடைவெளியைநிரப்பஎப்படியாயினும் வெளிநாடுகளில் வேலைசெய்வோர் அனுப்பும் அந்நியச் செலாவணிமற்றும் வெளிநாட்டவர்கள் இலங்கைக்குவருவதால் கிடைக்கும் அந்நியச் செலாவணிஆகிய இரண்டையும் கொண்டுசமாளித்துவிடவேண்டுமென்றேஅரசாங்கம் முழு மூச்சுடன் செயற்படுகிறது. அப்படிப் பார்த்தாலும் சுமார் ஒன்றரைபில்லியனுக்குக் குறையாமல் பற்றாக்குறைஏற்படும் என்றேதெரிகிறது. அதனைஈடு கட்டுவதற்குத் தான் அரசாங்கம் சர்வதேசநாணயநிதியத்தின் கடனுக்காகபடாதபாடுகிறது. அதுகிடைக்கவில்லையென்றால் அந்நியச் செலாவணிப் பிரச்சினைமேலும் அதிகமாகும்.

அந்நியச் செலாவணி இருப்புகையைக் கடித்ததாலும்,அந்நியநாடுகளும் சர்வதேசநிறுவனங்களும் கடன் தரும் தமதுகைகளைமடக்கிக் கொண்டதாலும் அரசாங்கம் இறக்குமதிகளைக் குறைக்கவேண்டிய,தடைகள் செய்யவேண்டியகட்டாயத்துக்குஉள்ளானது. ஒருநாட்டின் பொருளாதாரஉறுதிப்பாட்டுக்கும் முன்னேற்றத்துக்கும் அதன் அரசாங்கம் முன் கூட்டியேஏற்றுமதிஅதிகரிப்பையும் இறக்குமதிக் குறைப்பையும் திட்டமிட்டுசெயற்படுத்தவேண்டும். அவ்வாறாகதிட்டமிடப்பட்டசெயற்திட்டங்கள் உள்நாட்டுஉற்பத்திகளின் அதிகரிப்புக்கும் அதன் மூலமாகவேலைவாய்ப்புகளின் அதிகரிப்புக்கும் அதனூடாகமக்களின் வருமானஅதிகரிப்புக்கும் வாழ்க்கைத் தரம் தொடர்ச்சியாகஉயர்வதற்குமானதாகஅமையவேண்டும். ஆனால் இங்குஅரசாங்கம் இறக்குமதிகள் விடயத்தில் கட்டாயங்களின் காரணமாக,வேறுவழியில்லைஎனும் போதுநிலைமையைஎப்படிசமாளிப்பதுஎனசெயற்படுகிறது.

அரசியல் கட்சிகளின் எதிர்ப்பும் மக்களின் எழுச்சியும் ஆட்சிஅதிகாரத்தைஒன்றும் செய்யமுடியாதுஎன்றதொருநிலையிருந்தால் ஆட்சியாளர்கள் நாட்டின் நிலத்தையும் கடலையும் வானையும் தங்குதடையின்றி கூறு போட்டுவிற்றாயினும் வெளிநாடுகளிடமிருந்துகடன்கடனாகவாங்கிதடையின்றி இறக்குமதிகளைத் தொடர்ந்தே இருப்பார்கள். இப்போதுஅதுமுடியாமலிருக்கிறது. மாற்றாகஅரசாங்கம் எல்லாப் பாதையிலும் ஓடிப் பார்க்கிறது. ஆனால் ஒருபாதையிலிருந்தும் இது வரைவெளிச்சமெதுவும் வரவில்லை.

அதிகார கூட்டம் செழிக்கிறது
நாடுவங்குரோத்தில் மிதக்கிறது

  1. இறக்குமதித் தடைகளும் குறைப்புகளும் தொடருமேயானால் வேலையின்மையின் அதிகரிப்பும்,மக்களின் வருமானத்தினுடையமெய்யானபெறுமதிவீழ்ச்சியடைவதுவும்,வறுமையின் அதிகரிப்பும்,தேசியபொருளாதாரவீழ்ச்சியும் தொடர் கதையாகும். போசாக்கற்றோரின் தொகைஅதிகரிப்பால் இறப்போர் தொகைஅதிகரிப்பையும் எதிர்பார்க்கலாம். இது தொடர்பாகஐக்கியநாடுகள் சபையின் அமைப்புகள் மட்டுமல்ல,உள்ளுர் சுகாதாரமற்றும் மருத்துவஆய்வுகளும் கடுமையானஎச்சரிக்கைகளைவிடுத்துள்ளன.

2016ம் ஆண்டின் அரசஅறிக்கைகளின்படிவறுமைக் கோட்டுக்குஉட்பட்டோர் தொகைசனத்தொகையில் 3 சதவீதமானோர் என்றேகணக்குக் காட்டியது. ஆனால் இப்போதுசனத்தொகையில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் அடிப்படைஉணவுப் பாதுகாப்புஅற்றவர்களாகிவிட்டதாககணக்கிடப்படுகிறது. மக்களின் வருமானத்துக்கும் உணவுப் பண்டங்களின் விலைகளுக்கும் இடையேதொடர்புபடுத்தினால் குறைந்தபட்சமாகவேனும் தேவையானசத்துள்ளஉணவுகளைஉண்ணமுடியாநிலைமைக்குசனத்தொகையில் 60 சதவீதத்துக்குமேற்பட்டோர் இருப்பர் என்றேதோன்றுகிறது. சனத்தொகையில் பெருந்தொகையானோர் தமது மூன்றுநேரஉணவை இரண்டுநேரமாக்கிவிட்டார்கள் என்றும் கணிசமானசதவீதத்தினர் ஒருநேரம் மட்டுமேவயிறை நிரப்பஉண்கின்றனர் என்றும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தவண்ணம் உள்ளன.

பள்ளிக்கூடங்களுக்குபெருந் தொகையானமாணவர்கள் காலைநேரஉணவின்றியேசெல்லும் நிலைஉள்ளது. மாணவர்களுக்கானஉணவுவழங்கல் திட்டம் 5ம் ஆண்டுவகுப்புமற்றும் அதற்கும் குறைந்தவகுப்புகளின் மாணவர்களுக்குமட்டுமேவழங்கப்படுகிறது. அளவுரீதிலும் சத்துக்கள் ரீதியிலும் போதியஉணவுஉண்ணவேண்டிய இளம் பிள்ளைகள் வயிற்றைப் பட்டினியில் வைத்தபடியேபடிப்பில் தமதுகவனத்தைச் செலுத்தவேண்டியகட்டாயத்துக்குஉள்ளாக்கப் பட்டுள்ளனர். இந்தநிலைமையின் காரணமாகவே,மதத் தலைவர்கள் பொதுமக்களின் வாழ்க்கைநாளுக்குநாள் மோசமாகிக் கொண்டிருக்கஆட்சியில் இருப்பவர்களும் அரசியல்வாதிகளும் செழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுகுரலெழுப்புகின்றனர். அமைச்சர்களினதும்,அரசின் உயர் அதிகாரிகளினதும் அக்கறையும் செயற்பாடுகளும் நாட்டில் மக்கள் படும் பாடுகளையோ,நாட்டின் நெருக்கடியானபொருளாதாரநிலையையோபிரதிபலிக்கவில்லைஎன்பதுமட்டும் உண்மை.

(பகுதி 6ல் தொடரும்)