காத்தான்குடி பாள்ளிவாசல் கொலையை கடந்து சென்றால், நீயும் தமிழன் தான்….?

(Annam Sinthu Jeevamuraly)
காத்தான்குடி பாள்ளிவாசல் கொலையை கடந்து சென்றால், நீயும் தமிழன் தான் என்ற அறிவுறுத்தல் தோறணையில், முகநூலில் விவாதங்கள் கிளப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஏற்கனவே யாழில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லீம் மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் சும்மா கடந்து செல்லுமாறு , தொடர் குண்டு வெடிப்புகளுக்கு பின்னான விவாதங்கள் வலியுறுருத்துக்கின்றன.