காத்தான்குடி பாள்ளிவாசல் கொலையை கடந்து சென்றால், நீயும் தமிழன் தான்….?

தமிழர் அல்லாது ,தனித்தனி அடையாளங்களுடன் வாழ நிர்பந்திக்கப்பட்ட மனிதர்களை தனித் தமிழ் தேசியவாதிகள் ஒருபோதும் சக மனிதர்களாக கருதியதில்லை.

தமிழர் என்ற தேசிவாத உணர்வை வைத்தே யாழ் வெள்ளாள மையவாதம், மற்றைய சமூகங்களை அளந்து இன்று வரைக்கும் பதில் இறுத்து வருகின்றது. காலக்கொடுமை இப்படி இருக்கையில், நாம் தமிழர் உரிமையை கொண்டாடுபவர்கள்., முஸ்லீம்கள் என்ற அடையாளத்தை அவர்களாகவே கடந்து போகவேண்டுமென்கிறார்கள்.

“வன்முறைக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டுப் பணிபுரியவேண்டும் என்று Sharmila Seyyid ,Fathima Majitha போன்ற பெண்கள் கருத்து தெரிவித்தால் காத்தான் குடி பள்ளிவாசலை கடந்து செல்லவேண்டும் சகோதரிகளே என்று பதில் சொல்கிறார்கள். ஒரு காலத்தில் இவர்களை பார்த்து தோழர்களே! என்று விழித்தவர்கள் இப்பொழுது சகோதரிகளே! என்று அழைக்கின்றார்கள்.

இதில் இருந்து தெரிகிறதா தோழர்களே! தமிழ் தேசியவாதிகள் , சாதியை எதிர்ப்பதாகவும் சொல்கிறார்கள் அதேநேரம் சாதிமான்களையும் சும்மா கடந்து செல்கிறார்கள் . இதை விட கொடுமை என்னவென்றால் முஸ்லீம்களை பார்த்து சகோதர சகோதரிகளே என்கிறார்கள்.

முஸ்லீம் என்பது எனது அடையாளம் என்பவர்களைப் பார்த்து, இது போன்ற தமிழ் தேசியவாதிகள், அவர்களை தோழர் என்று அழைக்க தயங்குகிறார்கள்.

சகோதர சகோதரிகளே என்பது நிந்தனை வார்த்தையாகிப்போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.