ஜே.வி.பிக்கு இடம் கொடுத்ததே வந்த தவறு!

(மணியம்)

இன்று இலங்கையில் நடைபெறும் வன்முறை செயற்பாடுகளின் பின்னணியில் ஜே.வி.பி. என்ற சிங்கள இனவாத குட்டி முதலாளித்துவ கட்சி இருப்பது அரசியலை விளங்கிக் கொண்ட எல்லோருக்கும் தெரியும். இவர்கள் ஒருபோதும் திருந்தப் போவதில்லை என்பதும் எமது பட்டறிவு.
1970 இல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான முற்போக்கு அரசாங்கத்தைக் கவிழ்க்க ஒருசில மாதங்களிலேயே 1971 இல் ஆயுதக் கிளர்ச்சி செய்து சுமார் 7,000 சிங்கள் இளைஞர்களைக் காவு கொடுத்து, அரசால் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் 1977 இல் பதவிக்கு வந்த ‘அமெரிக்க யங்கி டிக்கி’ என அழைக்கப்படும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் விடுதலை பெற்று புத்துயிர் பெற்றனர்.