நீரின்றி அமையாது உலகு.. தண்ணீர் சிக்கனத்தை முன்னெடுக்கும் பிளம்பர்கள் சங்கம்!


(The Hindu)
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, `நீரின்றி அமையாது உலகு’ என்று தண்ணீரின் முக்கியத்துவத்தை ஒரே வரியில் விளக்கியுள்ளார் திருவள்ளுவர். தற்போதைய சூழல் தண்ணீரின் முக்கியத்துவத்தை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. தண்ணீருக்காக சென்னை மக்கள் படும்பாடு நாமெல்லாம் அறிந்ததுதான். எனவேதான், தண்ணீர் சிக்கனமும், சேமிப்பும் மிக மிக அவசியமானதாகியுள்ளது. இந்த நிலையில், தண்ணீர் சிக்கனத்தை பெரிய இயக்கமாக முன்னெடுக்கிறது இந்திய பிளம்பர்கள் சங்கம்.