பிரிட்டனை எங்கே கொண்டுபோய் விடுவார் போரிஸ் ஜான்ஸன்?

வரலாற்றில் முக்கியமான ஒரு தருணத்தில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார் போரிஸ் ஜான்ஸன். பதவியேற்ற பிறகு டௌனிங் தெருவில் அவர் ஆற்றிய உரையிலேயே அரசு செல்லவிருக்கும் திசை வெளிப்பட்டது. “இனி ‘ஒருவேளை, ஆனால்’ என்ற வார்த்தைகளுக்கு இடமில்லை; அக்டோபர் 31-க்கு முன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவது உறுதி” என்று முழங்கியவர், ஐரோப்பிய ஒன்றிய வெறுப்பாளர்களுக்குப் புதிய அமைச்சரவையில் இடமளித்தது சந்தேகமில்லாமல் இது ‘பிரெக்ஸிட் ஆதரவு அரசு’ என்பதை உறுதியாக்குகிறது.