மன்பிரட் மக்ஸ்-நீவ்: வெறுங்கால் பொருளாதாரம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உலக வரலாற்றில் மனித குலத்தின் வளர்ச்சிக்காகவும் நன்மைக்காகவும் பலர் தொடர்ச்சியாகப் பங்களித்தும் போராடியும் வந்துள்ளார்கள். இன்று, மனித குலம் அடைந்துள்ள வளர்ச்சி, மனித குலத்தின் மீதும் சமூகத்தின் மீதும், அக்கறை உள்ள மனிதர்களாலேயே சாத்தியமானது. இன்று, மனிதன் செல்வதற்காகவும் இலாபத்துக்காகவும் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும், அமைப்பொன்றில் சிக்கி இருக்கிறான். இந்த அமைப்பு, அவனைச் சுரண்டி, அவனைத் தின்று கொழுத்து, அவனை அழித்துக் கொண்டிருக்கிறது.