மரக்கறித் தோட்டம்

(வேதநாயகம் தபேந்திரன்)

யாழ்ப்பாண நகரின் பெரிய கடை மரக்கறிச் சந்தையில் நீத்துக்காய் வாங்கினேன். அப்போது பூசணிக்காய் இருப்பதைக் கண்டு விலை கேட்க கிலோ 100 ரூபா என்று வியாபாரம் செய்யும் பையன் கூறினான்.

எனக்கு 25 கிலோ பூசணிக்காய் தேவை என்றேன். கிலோ 90 ரூபாப்படி தரலாமென்றார்.

80 ரூபா போடுங்கள் என்றேன். கட்டாது என்றார்.