மரக்கறித் தோட்டம்

என்னிடம் பூசணிக்காய் இருக்கிறது. தருகிறேன். 70 ரூபாப்படி தாருங்கள் என்றேன்.
இல்லை 40 ரூபாப்படி தான் எடுப்போம் என்றார்.

உங்களிடம் விலை கேட்ட போது 80 ரூபாப்படி தரக் கட்டாது என்றீர்கள்.
இப்போது கொள்வனவுக்கு 40 ரூபாப்படி தான் எடுப்போம் என்கிறீர்கள்.

வியாபாரம் என்றால் அப்படித் தான் என்றார். விற்க வரும் விவசாயியிடம் பத்துக்கு ஒரு கிலோ கழிவு வாங்கி சந்தைக் குத்தகையையும் அவரைக் கொண்டு செலுத்தச் செய்துவிட்டு 40 ரூபாப் பூசணியை 100 ரூபாவுக்கு விற்று 60 ரூபா இலாபம் எடுக்கின்றீர்களே இது எந்த வகையில் நியாயம் என்று கேட்டேன்.

என்னிடம் தோட்டக் காணிகள் இருக்கிறது. குத்தகை நீங்கள் தர வேண்டாம். ஒரு வருடம் தோட்டம் செய்து பாருங்கள் தம்பி. கஸ்டம் தெரியுமென்றேன்.

மௌனமாக கேளாதது போல நிற்க வந்து விட்டேன்.
விவசாயி சார்பாகச் சிந்திக்கவோ போராட்டம் நடத்தவோ சரியான கட்டமைப்புகள் இல்லை.

உள்ளுரில் விவசாய அமைப்புகளைப் பார்த்திருக்கிறேன் தங்களை வளம்படுத்தும் செயற்பாடுள்ள சுயநலமிகள் தான் அங்கு உள்ளனர்.

குளத்தைத் தூர்வை எடுப்பதாகக் கூறி அதிலுள்ள மண்ணை விற்றுக் காசாக்கும் விண்ணர்களும் உள்ளனர்.

சென்ற வருடம் மார்ச் மாதம் உள்ளுராட்சி தேர்தல் முடிந்து சபைகளுக்கு தலைவர்கள் பதவியேற்ற போது உழவர் சந்தை உருவாக்கி விவசாயி பாதுகாக்கப்பட வேண்டுமென்று எழுதியிருந்தேன்.

எனது நண்பரான ஒரு பிரதேச சபைத் தலைவர் தான் உழவர் சந்தை முறையைக் கொண்டு வருவதாக எனது பதிவில் கருத்திட்டார்.

ஒரு வருடமும் 4 மாதமும் ஆகி விட்டது. உழவர் சந்தையைக் காணவில்லை. 2023 ஜனவரியில் உள்ளுராட்சித் தேர்தல் வரும் போது தான் விவசாயியைப் பற்றித் திரும்பவும் சிந்திப்பார்கள்.

உள்ளுராட்சி ஆணையாளருக்கு கடிதம் எழுதினேன். பதில் வரவில்லை.

இத்தைகைய கையறு நிலையால் தான் விவசாயிகள் காணிகளை விற்க வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் கட்டுகின்றனர்.

அதனால் மழை நீர் நிலத்தில் ஊறி நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுவதும் தடுக்கப்படுகிறது.

1970 முதல் 77 வரையான அம்மா காலம் மீண்டும் வராது.

விவசாயிகளைப் பாதுகாத்து அவர்களது உழைப்பு அவர்களுக்கே வருமானமாக வரச் செய்யும் வழி முறையைப் பற்றி அக்கறை கொள்வார் இல்லை.