ஏறாவூர் மக்கள் மீதான புலிகளின் 1990 ஆகஸ்து படுகொலைகள்

ஏறாவூர் மக்கள் மீதான புலிகளின் 1990 ஆகஸ்து படுகொலைகள் .நடந்தபோது முன்னாள் ஒரு தமிழ் இயக்கத்தின் உறுப்பினராகவும் பின்னர் தமது தவறை உணர்ந்து அதிலிருந்து விலகி ஏறாவூர் கிராமத்தின் பாதுகாப்பு குறித்து அதீத அக்கறையுயுடன் செயற்பட்ட வாலிபனான ஜலால்தீன் 12 ம் திகதி அதிகாலையில் தனது இயக்க அணுபவத்தினால் நடப்பதை உணர்ந்துகொன்டு கால்நடையாக காட்டுவழியாக ஓடி களுவங்கேர்னி இரானுவ முகாமுக்கு சென்று அங்கிருந்து இரானுவத்தை அழைத்து வந்தவர். இவர் சில வருடங்களின் பின்னர் அரவம் தீண்டி அகால மரனமடைந்தார். ( எனக்கு நேரில் அறிமுகமான அந்த துடிப்பும் துனிவும் கொன்ட வாலிபன் மறைந்த ஜலால்தீனுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணமாகும்)
ஏறாவூர் சம்பவத்தில் கொல்லப்பட்ட பலரில் பேராதனை பல்கலைக்கழ்க சிரேஷ்ட விரிவுரையாளரான ஜனப் அமீர்தீன் என்பவரின் குடும்பத்தினரும் அடங்குவர். இதில் முரன் நகை என்னவென்றால் இவரது சகோதரரும் புலிகள் இயக்கத்தில் இருந்தவர் , ஆனால் இவரது சொந்த குடும்பமும் புலிகளால் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
(Bazeer Seyed)