கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!(பகுதி 4)

(தோழர் ஜேம்ஸ்)
 
தோழர் ஸ்ராலின் அண்ணரால் எமக்கு நெருக்கமான உறவுக்குள் வந்த சிலரையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். சேஷாஸ்திரி என்ற எமது அரசியல் வித்தகர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தோழர் பாலதண்டாயுதம் என்பவரின் மகள் சுஜாதாவின் முன்னை நாள் வாழ்கைத் துணைவர். இவர்கள் இருவரும் மாக்சிய லெனிசிய செயற்பாட்டாளர்களுடன் நெருங்கிய உறவுகளை வைத்திருந்தவர்கள். இவ்விருவரும் எமது விடுதலை அமைப்பிற்கும் ஈழவிடுதலைக்கும் செய்த செயற்பாடுகள், அர்பணிப்புக்கள் பற்றி தனியாக ஒரு புத்தகமே எழுதலாம். இன்றவரை சுஜாதா தமிழ்நாட்டில் உள்ள இடதுசாரிகள் மத்தியில் உறவுகளைப் பேணிய வண்ணம் அடிமட்ட மக்களுடன் வேலை செய்பவர். நான் தமிழ் நாடு செல்லும் போதெல்லாம் அறிவிக்காமலே அவரின் வீடு சென்ற அழவழாவி விருந்துண்டு வருவது வழக்கம்.

தியாகராஜ நகரில் உள்ள பாலதண்டாயுதம் தெருவில் உள்ள பாலன் பிளாட்டில் இருந்தவர்கள் இவர்கள். தியாயராஜ நகர் இல் சறோஜினி தெருவும் பாலதண்டாயுதம் தெருவும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் 3 மாடிக் கட்டத்திற்கும் எமக்கும் மிகவும் நெருங்கிய உறவுகள் உண்டு. இந்த சிறு பிளாட்டிலேயே பாலதண்டாயுதம் மத்திய அமைச்சரவையில் மந்திரியாக இருந்த போது வாழ்ந்தவர். எம்ஜிஆர் காலத்தில் பாலதண்டாயுதம் மிகவும் வறுமையில் இருந்த போது எம்ஜிஆர் ஒரு காரை அன்பளிப்பாக வழங்கிய போதும் இதனை நிராகரித்து எளிய மனிதராக வாழ்ந்தவர். இவரின் பாசறையில் வளர்ந்தவர் இவரின் மகள் சுஜாதா.
 
நாம் உறங்கி எழுந்து எமது பொது சமூக வேலைகளை செய்ய நீண்டகாலமாக அனுமதித்த வீடு இது. இது எமது தாய் வீடு என்ற கூடச் சொல்லாம் இங்கு ஒரு இரவு உறங்காதவரகள் என்ற யாரும் எம்மவர்களில் இருக்க முடியாது. சேஷாஸ்திரின் தம்பி தேசிகனும் ஈழவிடுதலைப் போராட்டத்தின் இடைவிடாத போராளி இன்று எமது மண்ணுக்கு குடியேறி எமது ஊரவராக மாறிவிட்டார். இவர்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானது. இவர்களின் எங்களுடனான உறவுகளின் இறுக்கமும் தொடர்சியும் ஸ்ராலின் அண்ணாவினால் எற்பட்டதே. இவர்களும் குடந்தையை தமது பிறப்பிடமாக கொண்டவர்கள்.
 
காலணி ஆதிகத்திற்கு எதிரான வியட்நாம் மக்களின் போராட்டத்தின் சிறப்பு அம்சம் பெரும்பாலும் தம்மிடம் இருந்த வளங்களை கொண்டு போராட முற்பட்ட வெற்றியடைந்ததாகும். அதுவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நவீன ஆயுதங்களுக்க எதிராக இராணுவ, அரசியல் தந்திரோபாய ரீதியில் போராடி வெற்றியடைந்தது ஆகும். இந்த செயற்பாட்டடை ஈழவிடுதலைப் போராட்டதில் பெரும்பாலும் கடைப்பிடித்த?கடைப்பிடிக்க முற்பட்ட அமைப்பு பத்தமநாபா தலமையில் இருந்து ஈபிஆர்எல்எவ் என்றால் மிகையாகாது. தமது வளங்களை மட்டும் பாவித்து எமது மக்களின் தொழில் நுட்ப அறிவைப் பாவித்து சொந்த தயாரிப்பான குண்டெறியும் மோட்டார் தயாரித்தவர்கள்.
 
இதன் மூலம் எதிரியை கட்டுக்குள் வைத்திருந்த இவர்களின் பங்களிப்ப மகத்தானது. இந்த மோட்டரைத் தயாரிப்பதில் தோழர் ஸ்ராலின் அண்ணன் பங்களிப்பும் உத்திகளும் மகத்தானது. எமது இந்த தொழில் நுட்பத்தை புலிகள் எம்மிடம் இருந்து கைப்பற்றி பிற்காலத்தில் புலிகள் பாவிக்க முற்பட்டது வரலாறு.
1984 இல் கும்பகோணத்தில் நடைபெற்ற ஈபிஆர்எல்எவ் காங்கிரஸ் சிறப்பாக முழமையாக நடைபெற்று முடிவதற்கான வளங்கள் திரட்டுதல், உதவுதலில் தோழர் ஸ்ராலின் அண்ணன் பாரிய பங்களிப்பை செய்தார். காங்கிரஸ் இன் பின்பு தோழர்கள் ஊருக்கு திரும்பி விடுதலைக்கான வேலைகளைச் செய்வதில் மிகப் பெரிய சங்கடங்களை எதிர் நோக்க வேண்டி ஏற்பட்டது. காரணம் அப்போதுதான் இலங்கை அரசு கடல் பாதுகாப்பு வலையம் என்று கடலுக்கள் சிறிது தூரம் மட்டும் கடற் தொழில் செய்ய அனுமதி என்ற மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாட்டை அமுல்படுதியிருந்தனர்.
 
இதனால் இந்த கடல் பாதுகாப்பு வலயம் அமைத்த முதல் இரண்டு மூன்று மாதங்களில் தமிழ்நாடு யாழ்ப்பாணத்திறகு இடையோன கடல் போக்குவரத்து இலங்கை கடற்படையால் முற்று முழதாக தடைப்பட்டிருந்துது. இதனை மீறி கடக்க முற்பட்வர்கள் யாவரும் கடலுக்குள் அமிழ்தி கொல்லப்பட்டனர். இது விடுதலை அமைப்புக்களுக்கும் கள்ளக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஏன் அகதிகள் என்று புறப்பட்டவர்கள் என்று யாவருக்கும் பொதுவான மரண நிகழ்வாக இருந்தது.
 
இந்நிiயில் தோழர் ஸ்ராலின் அண்ணாவின் முன் முயற்சியுடனும் தயாரிக்கப்பட்ட மோட்டார் தொழல் நுட்பம் எமக்கு கை கொடுத்தது. வள்ளத்தில் பூட்டி பாவிக்கக் கூடிய மோட்டார் கை கொடுத்தது. வழமையாக மோட்டார் குண்டுகள் எவிய பின்பு தரையில் தட்டி உந்துதலால் வெடிக்கும் தொழில் நுட்பத்தை கொண்டிருக்கும். கடலில் இந்த தரையில் தட்டி உந்துதல் என்ற தொழில் நுட்பத்தை பாவிக்க முடியாது. இதனால் வேறு ஒரு தொழில் நுட்ப அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மோட்டார் வேதாரணியத்தில் பரிசோதிகப்பட்டது. இதன் போது நானும் பரிசோதனையில் ஈடபட்டிருந்தேன். இதில் தோழர் ஸ்ராலின் அண்ணாவும் கலந்து கொண்டார். இந்த பரிசோதனை எமக்கு வெற்றியை தந்தது.
 
இதன் வெற்றியின் மறு தினம் தோழர் ஐயா, சுரேஷ் என்னுடன் கூடிய முதல் தொகுதி யாழ்ப்பாணம் பயணமானது. மோட்டார் இயக்க தோழர் வீரன் எம்முடன் உடன் இருந்தார் நடுக்கடலில் எம்மைத் துரத்தி அழிக்க முற்பட்ட கடற்படையிலிருந்து எம்மைக் காப்பாற்றிது இந்த மோட்டார்தான். இன்று எனது உயிர் உள்ளது என்றால் இதற்கு தோழர் ஸ்ராலின் அண்ணாவின் இந்த தயாரிப்புக்களும் வள்ளத்தில் பூட்டி இயக்கிய மோட்டாரும்தான் காரணம்.
 
நீண்ட பயணம் வீரம்செறிந்து போராட்டம் கடலிலும் தரையிலும் தரை இறங்கிய பின்பும். மயிலிட்டி, எனது கிராமத்தவரின் ஓத்துழைப்புக்கள் சிறப்பாக எம்மைவிட்டு மறைந்த சாமியின் தொடர்ந்த பாதுகாப்பு வளங்கள் மறைவிடத்தை நோக்கிய பயணம் என்பனவே இங்கு எம்மைப் போன்ற பலரும் பொதுவாழ்வில் இன்றவரை உயிருடன் இருப்பதற்கான காரணங்களாக அமைந்தன.
 
தோழர் ஸ்ராலின் அண்ணாவின் இந்த வகையிலான பங்களிப்புகளே அவரை நாம் ஈழவிடுதலைப் போராட்டதின் தமிழக மூலவர் என்று குறிப்பிடுகின்றோம்
(தொடரும்…..)