கால்நடைப் பண்ணைகள் ஏன் தோல்வியடைகின்றன…?(பகுதி 1)

(Dr.S.கிருபானந்தகுமாரன் [BVSc,MVSc])


( கால்நடை வைத்தியர்)(கடந்த சில மாதங்களாக தமிழர் பொருண்மியம் வார இதழுக்கு நான் எழுதும் கட்டுரைத் தொடர்)

நேர்மையாக செய்யப்படும் எந்த தொழிலும் இலாபத்தை தர சிறிது காலம் எடுக்கும். சமையலை எடுத்துக் கொள்வோம் ஒரு சிறந்த சமையல்காரராக வர ஒருவருக்கு பல வருடங்கள் பிடிக்கும். இதை இப்பிடியும் சொல்லலாம் .ஒருவர் வாய்க்கு ருசியாக சாப்பாட்டை தயார் செய்ய அவருக்கு பல நாட்கள் எடுக்கும். பல தடைவைகள் சமையல் செய்ய வேண்டும்.