“நடந்தாய் வாழி வழுக்கியாறு

“நடந்தாய் வாழி வழுக்கியாறு” எனப் புகழ்வாா் எனது அபிமான எழுத்தாளா் செங்கை ஆழியான்.

யாழ் நகரிலிருந்து மானிப்பாய் ஊடாக கீரிமலை நோக்கிச் செல்லும் வீதியில் சண்டிலிப்பாய் உள்ளது. பத்து கிலோ மீற்றர் தூரமும் இல்லை. எனது கிராமத்துக்குரிய சிறப்புகளில் ஒன்று – யாழ்ப்பாணத்திலே உள்ள ஒரே ஒரு ஆறான “வழுக்கியாறு” ( வழுக்கையாறு என்பாா்கள் பேச்சுத் தமிழில்.அதில் தவறில்லை )சண்டிலிப்பாயை ஊடறுத்தே ஓடுகிறது என்பதுவும் தான்.