இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது

கிழக்கு மாகாணத்தின், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள எந்தவோர் இராணுவ முகாமும் அவ்விடங்களிலிருந்து அகற்றப்படமாட்டாது என்று, பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பில், அவ்வமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களில் பல அகற்றப்பட்டுவிட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. அந்தச் செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும், அதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயுமே பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்காக அந்தந்தப்பகுதிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.