இலங்கையர் படுகொலை: 800 பேர் மீது வழக்கு

சியால்கோட், வசிராபாத் வீதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராகப் பணியாற்றிய இலங்கையர் ஒருவரை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புயை பிரதான சந்தேக நபரைக் கைது செய்துள்ள பாகிஸ்தானின் பஞ்சாப் பொலிஸார், குறைந்தது 800 பேர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.