இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டை முழுமையாக பூட்டுவதற்கு எவ்விதமான தீர்மானதும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்  பேராசிரியர் சன்ன ஜெயசுமண,  ஆனால், பயணக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். எனினும், சில தீர்மானங்கள் அதிரடியாக எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.