இஸ்ரேல்-பலஸ்தீன வன்முறை உக்கிரம்

கத்திக் குத்து சம்பவங்களில் 3 இஸ்ரேலியர் 3 பலஸ்தீனர் பலி. இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிப்பு கிழக்கு nஜரூசலம் பகுதிகளில் நேற்று செவ்வாயன்று இடம்பெற்ற குறைந் தது ஐந்து வௌ;வேறு தாக்குதல் சம்பவங்களில் மூன்று இஸ்ரேலியர் கொல்லப்பட்டு 30 பேர் காயமடைந்துள் ளனர். தாக்குதல்தாரிகள் என்ற சந்தேகத்தில் மூன்று பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தின் ஜபல் அல் முகப் பிர் பகுதியில் இஸ்ரேல் பஸ் ஒன்றில் நடத்தப்பட்ட தாக் குதலில் இரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டு 15 பேர் காய மடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் ஆறு அல்லது ஏழு இஸ்ரேலியர்கள் படுகாயத்திற்கு உள்ளாகி இருப்பதாக இஸ்ரேல் அவசர சேவை பிரிவின் பேச்சாளர் மகேன் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பஸ் வண்டியில் இரு பலஸ்தீனர்கள் தாக் குதல் நடத்தியிருப்பதோடு ஒருவர் துப்பாக்கியாலும் மற் றையவர் கத்தியாலும் இஸ்ரேலிய பயணிகளை தாக்கிய தாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது ஒரு பலஸ்தீனர் சுட்டுக் கொல்லப்பட்டிருப் பதோடு மற்றையவர் துப்பாக்கி காயங்களுடன் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் பொலிஸ் பேச்சாளர் மிக்கி ரொசன்பெல்ட் குறிப்பிட்டார்.

‘எமக்கு என்ன செய்வது எங்கு போவது என்று தெரிய வில்லை” என்று இந்த தாக்குதலைப் பார்த்த இஸ்ரேலி யரான அவிஷெமஷ் குறிப்பிட்டார். ‘அவர்கள் இஸ்ரேல் வெறுப்பாளர்கள். அவர்கள் ஒழிக்கப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் இடம்பெற்று சில மணி நேரத்தில் ஜெரூசலத்தில் பலஸ்தீனர் தனது கார் வண்டியை பஸ் தரிப்பிடம் ஒன்றின் மீது மோதவிட்டு நடத்திய தாக்குத லில் மற்றொரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு வாகனத்தை மோதவிட்ட அந்த பலஸ்தீனர் பின்னர் கார் வண்டியில் இருந்து இறங்கி அங்கிருந்த நான்கு பாதசாரிகள் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் தரப்பு குறிப்பிடுகிறது. அலா அபூ ஜமால் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் குறித்த பலஸ்தீனர் இஸ்ரேல் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.

துப்பாக்கி காயத்திற்கு உள்ளான அந்த பலஸ்தீனர் மரணமடைந்ததாக பின்னர் செய்தி வெளியானது.

மறுபுறம் வடக்கு டெல் அவிவில் இடம்பெற்ற வௌ; வேறு தாக்குதல்களில் எட்டு இஸ்ரேலியர்கள் வரை காயமடைந்துள்ளனர். இதில் ஒரு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் பலஸ்தீனர் ஒருவர் மீது இஸ்ரேல் பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் அவர் படு காயத்திற்குள்ளாகியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பதிவான வீடியோ ஒன்றில், குறித்த பலஸ்தீனர் மீது பலரும் இணைந்து தாக்குவதை காண முடிகிறது. அங்கிருக்கும் கடை உரிமையாளர் ஒருவர் விபரிக்கும்போது, கூச்சல் சத்தம் கேட்டதை அடு த்து தன்னிடம் இருந்த குடையை எடுத்துக் கொண்டு அங்கு சென்று தாக்குதல்தாரியை அடித்ததாக தெரிவித் தார். ‘அந்த நபர் ஒருவரை கத்தியால் தாக்க ஆரம்பித் தார். நான் பல முறை அவனை அடித்து உதைத்தபோது கையில் இருந்த கத்தி நழுவி விழுந்தது. அப்போது என்னிடம் துப்பாக்கி ஒன்று இல்லாமல் போனது. அப்படி இருந்திருந்தால் அவன் மீது சுட்டிருப்பேன்” என்று அந்த இஸ்ரேலியர் குறிப்பிட்டார்.

இந்த பலஸ்தீனர் துப்பாக்கிச் சூட்டுக்கும் இலக்காகி இருப்பதாக இஸ்ரேல் மருத்துவ வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. எனினும் அவர் தாக்குதல் நடத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை பலஸ்தீன தரப்பு மறுத்துள்ளது.

அதேபோன்று ரானன் பகுதியில் இடம்பெற்ற பிறிதொரு சம்பவத்தில் நான்கு இஸ்ரேலியர் காயமடைந்தனர்.

இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிப்பு பலஸ்தீன பகுதிகளில் இம்மாத ஆரம்பம் தொடக்கம் எந்த தொய்வும் இன்றி பதற்ற சூழல் நீடித்து வருகிறது.

இதில் கடந்த திங்களன்று ஐந்து இஸ்ரேலியர்கள் காயமடைந்ததோடு அதில் நால்வர் கத்திக் குத்து தாக் குதலுக்கு இலக்கானதாக செய்தி வெளியானது. எனி னும் இந்த சம்பவங்களில் ஒன் றில் மாத்திரமே உண்மையாக தாக்குதல் ஒன்று நிகழ்ந்திருப்ப தாக சம்பவத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மூன்று பலஸ்தீ னர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட னர். இதில் 17 வயது சிறுவனும் அடங்குகிறான்.

நேற்றை தினம் இடம்பெற்ற சம்பவங்களுடன் இம்மாதம் ஆரம் பித்தது தொடக்கம் கொல்லப் பட்ட இஸ்ரேலியர்களின் எண் ணிக்கை ஏழாக உயர்ந்துள் ளது.

இதே காலத்தில் இஸ்ரேல் படையினர் குறைந்தது 29 பலஸ்தீனர்களை சுட்டுக் கொன் றது. இந்த இரண்டு வார கால த்திற்குள் கொல்லப்பட்டிருக் கும் பலஸ்தீனர்களில் ஒன்பது பேர் தாக்குதல்தாரிகள் என்று குற்றம்சாட்டப்பட்டிருப்ப தோடு, எட்டு சிறுவர்களும் அடங்குகின்றனர்.

ஆக்கிரமிப்பு பலஸ்தீனம் எங்கும் தற்போது மோதல் கள் இடம்பெற்று வருகிறது. இதன்போது இஸ்ரேல் படை யினர் 1,300க்கும் அதிகமான பலஸதீனர்கள் மீது துப் பாக்கிச் சூடு நடத்தி இருப்பதாக பலஸ்தீன அதிகார சபையின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் இரு சம்பவங்களில் நான்கு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் படையினர் மற் றும் குடியேற்றக்காரர்கள் அத்துமீறி செயற்பட்டதை அடு த்தே அங்கு பதற்றம் அதிகரித்தது. இந்த பதற்றம் இஸ் ரேல் காசா எல்லையிலும் உக்கிரமடைந்துள்ளது.

பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் படை உச்சகட்ட பலப் பிரயோகத்தை பயன்படுத்துவதாக உரிமைக்கு குழுக்கள் குற்றம்சாட்டியுள்ளன.