மலேஷிய எம்.எச். விமானத்தை தாக்கியது ரஷ்ய தயாரிப்பு

மலேஷிய ஏர்லைன் விமானம் எம்.எச்.17 ரஷ்யா தயாரிப்பு புக் ஏவுகணை தாக்கியே வீழ்த்தப்பட்டிருப்பதாக நெதர்லாந்து பாதுகாப்பு சபை அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேற்படி அனர்த்தம் குறித்து நேற்று வெளியான இறுதி அறிக்கையில், விமானத்தின் முன்பாக இடது புறத்தில் ஏவுகணை தாக்கியதன் விளைவாக அது உடைந்து விழ ஆரம்பித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களே விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு மற்றும் மேற்குலகம் குற் றம்சாட்டுகிறது. எனினும் குறித்த ஏவுகணை உக்ரைன் அரச கட்டுப்பாட்டு பகுதில் இருந்தே ஏவப்பட்டதாக ரஷ்யா குறிப்பிடுகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைன் வான்பரப்பில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அந்த பயணிகள் விமானத் தில் இருந்த 298 பேரும் கொல்லப்பட்டனர். ஆம்ஸ்டர்டா மில் இருந்து குவாலாலம்பூரை நோக்கி புறப்பட்ட இந்த விமானம் கிழக்கு உக்ரைனின் கிளர்ச்சியாளர் கட்டுப் பாட்டு பகுதியிலேயே வெடித்துச் சிதறியது.

உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரச படைக்கு இடையிலான மோதல் உக்கிரமடைந்த காலத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நெதர்லாந்த பாதுகாப்பு சபை ஓர் ஆண்டுக்கு மேலாக விசாரணை நடத்தி இருந்தது. இதில் விமானப்பாகங்களில் இருந்து பெறப்பட்ட ஊலோகத் துண்டுகளை ஆதாரமாக கொண்டே அது புக் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கா னது உறுதியாகியுள்ளது.