காணாமல்போன இந்திய மீனவர் சடலமாக மீட்பு

இவ்வாறு உயிரிழந்தவர், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ராசு ரஜிகரன் (வயது 27) என்பவர் ஆவார். குறித்த மீனவரின் சடலம், தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடற்படையின் படகுடன் மோதிய இந்திய மீனவர் படகிலிருந்து கைது செய்யப்பட்ட  இரண்டு இந்திய மீனவர்களும், மேலதிக சட்ட நடிவடிக்காக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில், நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.