கூடங்குளம் அணு மின்நிலைய ஆதரவை விரிவுபடுத்தும் ரஷ்யா

புவிசார் அரசியல் அபிவிருத்தியுடன் தொடர்புடைய சவால்கள் இருந்தாலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணு உலைகளுக்கு ரஷ்யா தொடர்ந்தும் ஆதரவு வழங்கி வருகிறது. அதன்படி, அணு மின்னிலையத்தின் அணு உலை 5க்கான வெப்பப் பரிமாற்றக் கருவியை ரஷ்யா தயாரித்துள்ளதாகவும் இந்தியாவுக்கு அனுப்புவதற்காக நிவாரணத் தொட்டி தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.