சமத்துவக் கட்சியின் வன்னி தலைமையகம் திறப்பு

சமத்துவக் கட்சியின் வன்னி தலைமை அலுவலகம், வவுனியா கந்தசுவாமி வீதியில் நேற்று முன்தினம் (28) திறந்து வைக்கப்பட்டது. அலுவலகத்தின் பெயர்ப்பலகையை கட்சியின் தவிசாளர் சுப்பையா மனோகரனும் கட்சி அலுவலகத்தை கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமரனும் திறந்து வைத்தார்கள்.