சமூக பரவல் நிலையை அடைந்தது ஒமிக்ரோன்

இந்தியாவில் ஒமிக்ரோன் தற்போது சமூக பரவல் நிலையை அடைந்துள்ளது என இந்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் INSACOG அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல பெருநகரங்களில் ஒமிக்ரோன் ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  INSACOG அமைப்பு வெளியிட்ட வாராந்த அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்றும் வேகமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.