டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு செருப்பு மாலை!பெண்களே செய்த கொடூரம்.

தலைநகர் டெல்லியில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு வீதியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதைத் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் போதிலும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தே வருகிறது.