திடீரென வாகனத்திலிருந்து இறங்கிய ரணில்

பாராளுமன்றத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவம் மற்றும் பொலிஸாரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார்.ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்திலிருந்து தனது வாகனத்தில் புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  திடீரென தனது வாகனத்திலிருந்து இறங்கி அங்கிருந்த பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடினார்.