பொட்டு அம்மானின் காணிக்கு ஸ்ரீதரன் எம்பி உரிமை கோருகின்றாரா?

கிளிநொச்சியிலிருந்து 1990 ஆம் ஆண்டு புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நாங்கள் மீண்டும் தற்போது மீளகுடியேறியுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இனவாத நடவடிக்கையால் கிளிநொச்சியில் வாழ்கின்ற முஸ்ஸிம் மக்களின் இருப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது என பாரூக் பாயிஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் டிஎம் சுவாமிநாதன் கலந்துகொண்ட கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த போது நாங்கள் 1990 ஆம் ஆண்டு வரை கிளிநொச்சி திருநகர் கிராமத்தில் வசித்தோம் இதனை அங்கு தற்போதும் உள்ள தமிழ் மக்களை கேட்டால் சொல்வார்கள். புலிகளால் 1990 களில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட பின்னர் எங்களுடைய காணிகளை புலிகள் வைத்திருந்தார்கள். இதில் என்னுடைய காணியை பொட்டு அம்மான் வைத்திருந்ததாக தற்போத கூறுகின்றார்கள்.ஆனால் தற்போ மீள குடியேறியுள்ள நான் எனது காணிக்கு சென்ற போது பிரதேச செயலகத்தினால் தடுக்கப்பட்டேன். காரணத்தை கேட்டபோது மாவட்டச் செயலக உத்தரவு என்றார்கள் மாவட்;டச்செயலகத்திற்கு சென்ற போது சிறிதரன் எம்பியின் அறிவுறுத்தல் அவரிடம் சென்று வாருங்கள் என்றார்.

இந்த நிலையில் சிறிதரன் எம்பியிடம் சென்ற போது அவர் சொன்னார் அது பொட்டமானுக்கு விற்கப்பட்ட காணி எனவே அந்தக் காணியின் ஒரு பகுதியை நாங்கள் திருநகர் கிராமத்தின் பொது தேவைக்கு பயன்படுத்த தீர்மானித்திருக்கின்றோம். மிகுதி காணியை எங்களுடைய காணிக்குழுவின் தீர்மானத்தின் படி உங்களுக்கு வழங்குவது தொடர்பில் யோசிக்கலாம் என்றார்.

நான் அமைச்சரிடம் கேட்கிறேன் காணியை தீர்மானித்து வழங்குவதற்கு அரசியல்வாதியான சிறிதரனுக்கு யாhர் சட்ட ரீதியான அதிகாரம் வழங்கியது. முஸ்ஸிமான என்னுடைய காணி பொட்டமானுக்கு விற்க்கப்ட்ட காணி என்கின்றார் ஆனால் பரவிபாஞ்சானிலும் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் எத்தனை எத்தனை காணிகள் தமிழ் மக்களால் புலிகளுக்கு விற்கப்பட்டது. அந்த காணிகளை அனைத்தையும் மீணடும் அந்த பெற்றுவிட்டார்கள்தானே. இந்த நிலையில் ஏன் எனது காணிக்கு மட்டும் இவ்வாறு கூறப்படுகிறது. சிறிதரனின் இனவாதம் கிளிநொச்சி முஸ்ஸிம் மக்களுக்க பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே அவரின் நடவடிக்கைகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது அமைச்சராகிய நீங்கள் எங்களது காணிக்கு முடிவு சொல்லுங்கள் என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன் சிறிதரனின் இனவாதத்தை என்னால் நிறுத்த முடியாது.ஆனால் உங்களுடைய காணி விடயத்தில் நியாயமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் அரச அதிபருக்கு கூறுகின்றேன். ஆதாவது ஒரு மாத்திற்குள் அரச அதிபரின் குழு ஒன்று விசாரணைகளை மேற்கொண்டு உங்கள் காணி தொடர்பில் நல்ல முடிவை மேற்கொள்ளவார்கள் என்றார்.