விச ஊசி விவகாரமும் விக்கியாரும்

வைத்தியரால் மட்டுமல்ல நீதிபதியாலும் அரசியல்வாதியாலும் கூட ஊசி ஏற்ற முடியும் என்பதை நிரூபித்த பெருமை முதல்வர் விக்னேஸ்வரனையே சாரும். நான் முன்பு கூறிய படி இந்த ஊசிக்கதை முன்னாள் புலிகளிடமும் அவர்களின் உறவினர்களிடம் அதிகளவு உளவியல் பிரச்சினைகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

உண்மையிலேயே ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக விக்கினேஸ்வரன் உணர்ந்திருந்தால் உரியவராறு அதை கையாண்டு உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்க வேண்டும்.

அதைவிடுத்து முதல்வர் பதவிக்குறிய தொழில்முறை நடத்தையையோ அல்லது முன்னாள் நீதிபதிக்குறிய பண்பையோ கருத்தில் கொள்ளாமல் இந்த ஊசிவிவகாரத்தில் ஊடக அரசியலை நடாத்தியுள்ளார்.

இவரது இந்த செய்கை இங்கே நாம் முகநூலில் கிளுகிளுப்புக்காக பதிவு போடுவது போன்றுள்ளது.

விஷ ஊசி விவகாரத்தை விளையாட்டாக எடுக்காமல் அதனை இனியும் தொடர அனுமதிக்காமல் பிரதமர் ரணில் தகுதி வாய்ந்த வைத்தியர்களை கொண்டு இந்த முன்னாள் போராளிகளை பரிசோதித்து உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்.

உண்மையில் விக்னேஸ்வரன் கூறியது போன்று ஊசி ஏற்றப்பட்டு இருந்தால் அது மிக பாரதூரமான குற்றசெயலாகவே அமைவதால் அதில் சம்மந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் மாற்று வழியையும் ஏற்படுத்த முன்வர வேண்டும்.

ஒரு வேளை விக்னேஸ்வரன் கூறியது பொய் என்றால் இவ்வாறான பொய் வதந்தியை கூறி மக்களை பயங்கொள்ள செய்தமைக்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதோடு அவரை பதவியில் இருந்து விலகுமாறு நிர்பந்திக்க வேண்டும்.

இவ்வாறான பொறுப்பற்ற மூன்றாம்தர அரசியல்வாதிகள் தேவைதானா என்பதை மக்கள் சிந்திக்கும் நேரம் இது.

சிந்திப்பீர்களா?

(Rajh Selvapathi)