பொதுமுடக்கத்தை அறிவித்திடுக.


முகக்கவசம் அணியுங்கள்.
தனிநபர் இடைவெளியை பராமரியுங்கள்.
தேவையின்றி வெளியே செல்லாதீர்கள்.
வெளியூர் பயணங்களை தவிருங்கள்.
கைகளை அவ்வப்பொழுது நன்றாக சோப்புப் போட்டு கழுவுங்கள்.
கைகளை கிருமிநாசினி கொண்டு தூய்மை படுத்திக் கொள்ளுங்கள்.
கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள்
காய்ச்சல்,தலைவலி, உடல் வலி,சளி, இருமல்,மூச்சுத்திணறல் போன்றவை இருந்தால், உடன் அரசு மருத்துவமனைகளை நாடுங்கள்.
மிக முக்கியம்…
மேற்கண்ட அறிகுறிகள் இல்லாமல் , வெறும் வயிற்றுப் போக்காக கூட கொரோனாவின் அறிகுறி வெளிப்படலாம்.
இரண்டாம் அலையில் இந்த வெளிப்பாடு முதன்மையானதாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்நிலையில் சிகிச்சை பெறுவதிலும் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.
மருத்துவர்கள் ,
செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உழைத்து உழைத்து சோர்ந்துபோய்விட்டனர். ஓய்வின்றி வாடுகின்றனர்.
கொரோனா அதிகரிப்பால்,
நமது இந்திய மருத்துவத் துறையோ , மூழ்கும் டைட்டானிக் கப்பல் போல் மாறிவருகிறது.
ஏழைகளும்,ஒடுக்கப்பட்ட சமூக மக்களும் ,
சிறுபான்மையினரும் சிகிச்சைகள் கிடைக்காமல் சிரமப்படும் நிலை வரலாம் என நிபுணர்களும் பலரும் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்காவில் இதே போன்ற நிலை ஏற்பட்டது.
குஜராத்தில் மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றி நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வருகின்றன.
மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டு வருகிறது.
இதைப் போக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மக்கள் மற்றும் தொழில் துறையினரின் பொருளாதார நலன்களையும் பாதுகாப்பையும் உறுதி செய்து,பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பொது முடக்கத்தை அறிவிக்க வேண்டும்.
பொதுமுடக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாகத் தோன்றுகிறது.
பட்டினிச்சாவையும் தடுக்க வேண்டும்.கொரோனா சாவையும் தடுக்க வேண்டும் என்ற இரு பெரும் கடமைகள் மத்திய – மாநில அரசுகளுக்கு உள்ளன.
அந்தக் கடமைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.